அன்புச சகோதரர்களே ... சிந்தியுங்கள் posted bySUBHAN (ABU DHABI)[02 March 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2989
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, வரும் சட்டசபை தேர்தலில் எட்டு தொகுதிகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் நாகூரில், மாநில தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது.
மாநில தலைவர் காதர் மொகிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணியில் இடம் பெற்றுள்ள எங்கள் கட்சிக்கு, மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எட்டு தொகுதிகள் கேட்போம். 21 மாவட்டங்களில், 41 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய கட்சியாக முஸ்லிம் லீக் உள்ளது. கடையநல்லூர், ராமநாதபுரம், முதுகுளத்தூர், பழநி, நாகை, ஆம்பூர், பெரம்பூர் உட்பட எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடிய 21 தொகுதிகள் பட்டியலை, முதல்வரிடம் அளித்துள்ளோம். இருப்பினும், எங்களுக்கு கூட்டணியில் தொகுதி என்பது முக்கியமில்லை. சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக, நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர்வதற்காக நாங்கள் எதிர்பார்ப்பில்லாமல் பாடுபடுவோம். இவ்வாறு காதர் மொகிதீன் கூறினார் - தினசரி நாளிதழ் ( 25-02-2011 )
அன்புச சகோதரர்களே ... சிந்தியுங்கள் ....
தெருவுக்கொரு ஜாதிக்கட்ச்சி வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்கள் ஜாதிக்கு 10 சீட்டு வேண்டும் 15.வேண்டும் என்று பலமுள்ளக்கட்சிகளிடம் பேரம் பேசும்போது ...
ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருக்கும் இவர்கள் ஏன் இப்படி தடுமாறுகிறார்கள் ...?
கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் சாஹிப் அவர்களின் தலைமைக்கு பிறகு நமக்கு எந்த ஒரு அரசியல் கட்சியிடமிருந்தாவது உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா...?
நேற்று முளைத்தக் கட்சிகளெல்லாம் தங்களுக்கென்று ஒரு சின்னம் வைத்துக்கொண்டு
அதன் வாயிலாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் மக்களவையிலும் ,சட்டசபையிலும்
தங்கள் இனமக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்களே அப்படி நம்மால் சுதந்திரமாக செயல் படமுடிகிறதா..?
நம் கருத்துக்களைப் பேச வேண்டுமென்றால் நாம் எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ
அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பேசமுடியும்.அதுவும் அவர்களது எண்ணங்களைத்தான் நாம் பிரதிபலிக்க வேண்டும்.
ஏன் இந்த அவல நிலை .... ?
சிந்திப்போம் ......... செயல்படுவோம் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross