Re:... posted byvilack sma (Hetang , Jiangmen)[10 September 2013] IP: 121.*.*.* China | Comment Reference Number: 30058
உலகின் அத்தனை நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளின் நிலை இப்படிதான் . அரசு சார்ந்த தொழிற்சாலைகள் மட்டும் விதிவிலக்காக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து விதிகளையும் கடைபிடித்து வருகின்றன . இறுதியில் , நட்டத்தில் இயங்கும் . ஆலையை மூடினால் கொடி பிடிப்பார்கள். இதுதான் இன்றைய யதார்த்த நிலை .
ஆலைகள் இருக்கும் இடங்களில் சுகாதாரகேடு ஏற்படத்தான் செய்யும் . சுகமாக வாழ விரும்பினால் ஆலையை மூட வேண்டும் . முடியுமா ? பெருகும் ஜனத்தொகைக்கு வேலையும் வேண்டும் . சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் . எப்படி ?
முன்பு ஜனத்தொகை குறைவு . மக்களுக்கு தேவையும் அதிகம் இல்லை . இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள் . நீண்ட நாள் நோயின்றி இருந்தார்கள் . இப்போது தேவையும் அதிகம் , அதற்கு இணையாக நோயும் அதிகம் .
இப்போதும்கூட நோயின்றி சுகமாக இருக்க வழி வகைகள் உண்டுதான் . ஆலை இல்லாத , மாசு ஏற்படுத்தும் போக்குவரத்து இல்லாத கிராமங்கள் பல உள்ளது . அங்கே போய் இருக்க முடியுமா ?
அடிக்கடி DCW பற்றி புலம்பிகொண்டிருப்பதைவிட , இருக்கும் இடத்தை எவ்வாறு சுகாதாரமாக வைப்பது என்பதை கற்றறிய வேண்டும் . பொது இடங்கள் , தெருக்கள் , வீட்டில் உள்ள சிறிய தோட்டங்கள் , மொட்டை மாடி இவற்றில் மரங்கள் வளருங்கள் . அதன் பசுமையை பார்த்தாலே நோய்கள் பறந்துவிடும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross