மனம் தான் சாட்சி! posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[19 September 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 30204
அஸ்ஸலாமு அலைக்கும்,
2011 தேர்தலின் போது அனிதா ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு வாக்களிக்க தி மு க சார்பில் காயல் பட்டணத்தில் வீடு வீடாக பணம் விநியோகிக்கப்பட்டது என்பது ஊரார் அனைவருக்கும் தெரியும்.
***மார்க்கத்தை பேணும் மிக சிலர் இப்படியான பணத்தை வாங்கவில்லை.
***வேரு சிலர் இதெல்லாம் நம்மிடம் கொள்ளையடித்த பணம் தான் என்ற ஆறுதலுடன் வாங்கினார்கள்.
***இன்னும் சிலர் அதை வாங்கி நலிந்தவருக்கு கொடுத்து உதவினார்கள்.
ஏன், நாம் தொழில் செய்யும் கோழிக்கோட்டிற்க்கு கூட ஒரு தொகை வந்து அதை வைத்து கோழிக்கோடு-காயல்பட்டினம் (வழமைக்கு நேரத்திற்கு முன்னதாகவே,வழமை இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் இருந்து புறப்பட்ட) பேரூந்தில் போயி வாக்களித்தும் வந்தார்கள் பலர். இதெல்லாம் நாம் அறிந்த உண்மை.
ஆனால் நீதிமன்றத்திற்கு தேவை இதற்க்கெல்லாம் சாட்சியங்கள் தானே? இதற்க்கெல்லாம் நிச்சயமாக ஒரு சாட்சியங்களும் விட்டு வைக்க மாட்டார்கள். அல்லாஹுவே இதற்க்கு சாட்சி. மட்டுமல்லாமல் இந்த பணத்தை வாங்கியவர்களின் மனம் தான் அதாங்கோ மனசாட்சி.
(மக்களே! இனி மேலாவது இது போல ஹராமான பணத்திற்கு ஆசை படாதீர்கள்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross