தலைவி உட்பட அணைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[01 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30485
நகர்மன்றத்தில் 103 தீர்மானங்கள் தேங்கி கிடக்க யார் காரணம்...? அது எதனால் காரணம்...? தலைவி மீது நம்பிக்கை இல்லை என புகார்....! தலைவி பதவி விலக வேண்டும்...! தலைவி தலைமையில் இனி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்...! என இப்படியே பல கூட்டங்களை புறக்களித்து வெளிநடப்பு செய்து... செய்து... மக்கள் நல பணிகளின் தீர்மானங்கள் முடங்கி பல மாதங்களாக தலைவியின் தலைமையை புறக்களித்த உறுப்பினர்களுக்கு இன்று தலைவி மீது நம்பிக்கை மலர்ந்து இக்கூட்டம் தலைவியின் தலைமையில் நடந்துள்ளது...
இதை அன்றே (தலைவியின் மீதுள்ள நம்பிக்கையை) உறுப்பினர்கள் யோசித்து தீர்மானங்களை தேங்க விடாமல் நிறைவேற்றி இருக்கலாம்...! இதில் ஒருவரை ஒருவர் புரிதலில் ஏற்பட்ட குழப்பமா..? அல்லது வேறு காரணமா...?சரி அது எதுவாகவும் இருக்கட்டும்...! இப்போதாவது இந்த தலைவியின் தலைமை மீது உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு கூட்டம் வெளிநடப்பு இல்லாமல் நடந்ததே அதுவே நகர் மக்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சி...! தேங்கி கிடக்கும் மீதமுள்ள பொருள்க்களின் தீர்மானங்கள் விரைவில் நிறைவேறட்டும்...
வெளிநடப்பு - தலைவி மீது நம்பிக்கையில்லை என்ற பழைய புராணங்களை இனி மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்பதனை உறுப்பினர்கள் நன்கு உணர்ந்ததாக இக்கூட்டத்தின் மூலம் தெரிய முடிகின்றது... எல்லாம் மக்களின் நன்மைக்கே... இனி மாதமாதம் கூட்டம் நடத்தப்பட்டு இனி வெளிநடப்புகள் என்ற செய்தியே நமது நகர்மன்றத்தில் இருக்க கூடாது...!
இன்னும் மூன்று வருடங்கள் பதவி காலம் உள்ளது உறுப்பினர்களில் சிலர் நகராட்சி சட்ட விதிகள் சம்பந்தமான நூல்கள் படித்து பின் தெளிவு பெற்று நகர்மன்றத்தில் விவாதிக்கலாமே...!
தலைவி உட்பட அணைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross