Like sun, moon raises from the east.. posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[02 October 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 30497
" சூரியன் சந்திரன் உதயமாகும் திசை எது ? " (Copy & Paste)
சூரியனைப் போல சந்திரனும் கிழக்கே உதித்து மேற்கேதான் மறையும் என்கிற அடிப்படை விஞ்ஞான ஞானம் இல்லாதவங்களிடமிருந்து (பிறை விசயமாக) அறிந்துகொள்ள என்ன இருக்கிறது.
"பிறை பார்க்க வேண்டும் எனும் ருஃயத் என்ற வார்த்தைக்கு "கண்களால் பார்க்க வேண்டும்" என்று அர்த்தம் கொள்ள என்ன ஆதாரம் ?" (Copy & Paste).
"ருஃயத்" என்ற அரபிச் சொல்தான் கீழ்க்கண்ட புஹாரி ஹதீஸ் (எண்;1854) ல் "கண்ணால் காண்பதற்கு" உபயோகிக்கப்பட்டுள்ளது.
"இங்கிருந்து இரவு வருவதை நீங்கள் "கண்டால்" நோன்பாளிகள் நோன்பு திறக்கட்டும்". ( புஹாரி : 1854.)
(பொருள்: சூரியன் மறைவதை "கண்ணால் கண்டால்" நோன்பு திறக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.)
"ருஃயத்" என்ற அரபிப் பதத்திற்கு "கண்ணால் காண்பது" என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களில் எத்தனை பேர் நோன்பு திறக்கும் போது சூரியன் மறைவதை கண்ணால் பார்த்து நோன்பு திறக்கின்றீர்கள்?
முஅதீன் பாங்கு சொல்வதை கேட்டுதானே நோன்பு திறக்கின்றீர்கள். அல்லது கடிகாரத்தப் பார்த்து நோன்பு திறகின்றீர்கள். பாங்கு சொல்லக் கூடிய முஅதீன் கூட சூரியன் மறைவதை கண்ணால் பார்த்து பாங்கு சொல்வதில்லை. அவர் கூட கடிகாரத்தப் பார்த்து தான் பாங்கு சொல்லுகிறார்.
நோன்பு திறப்பதற்கு விஞ்ஞானத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள். நோன்பை ஆரம்பிப்பதற்கு விஞ்ஞானத்தை பயன்படுத்திக்கொள்ளமாட்டீர்கள்?
சூரியனும், சந்திரனும் உங்களுக்கு காலம் காட்டி என்று அல்லாஹ் சொல்லுகிறான். இல்லை இல்லை அல்லாஹ் சொல்லுகின்றதில் சூரியன் கணக்கை மட்டும்தான் ஏற்றுக்கொள்வோம். சந்திரன் கணக்கை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள்.
"மாற்றங்கள் பல கண்ட, தவறுகள் பல நிறைந்த குரானுக்கும் ஹதீஸுக்கும் மாறுப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்ற மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!" (Copy & Paste)
கடந்த 20-25 வருடங்களில் நீங்கள் உங்கள் பிறைக் கொள்கையில் கண்ட / ஏற்படுத்திய மாற்றங்களை விடவா ஹிஜ்ரி நாட்காட்டி மாற்றங்களைக் கண்டுவிட்டது ?
20 ஆண்டுகளுக்கு முன்னால் மண்ணடியில் பார்த்த பிறை தாம்பரத்தைக் கட்டுப்படுத்தாது என்றீர்கள் . பாலக்காட்டில் பார்த்த பிறை கோயமுத்தூரை கட்டுபடுத்தாது என்றீர்கள்.
10 ஆண்டுகளுக்கும் முன் ஒரு மாவட்டத்தில் பார்த்த பிறை பக்கத்து மாவட்டத்தைதை கட்டுப்படுத்தாது என்றீர்கள் . பிறகு மாவட்டைப் பிறை மண்டலப் பிறையாக மாற்றிவிட்டீர்கள். பின் மண்டலப் பிறையை 5 வருடங்களுக்கு முன் மாநிலப் பிரையாக்கிவிட்டீர்கள்.
நல்ல முன்னேற்றம். இதே ரீதியில் போங்க. இன்ஷா-அல்லாஹ் கூடியவிரைவில் மாநிலப் பிறை தேசியப் பிறையாகிவிடும். தேசியப் பிறை சர்வதேசப் பிறையாகிவிடும். சர்வதேசப் பிறை என்று வந்துவிட்டால் வேறு வழியில்லை. அடுத்தது கணக்கிடுதல்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross