புறம்போக்கு நிலமும் குப்பை கொட்டும் மற்றும் பயோகேஸ் நிலங்களும். posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[09 October 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 30606
நம் நகராட்சிக்கு (பஞ்சாயத்து) தமிழக அரசால் வழங்கப்பட்ட புறம்போக்கு நிலங்கள் பற்றி, இந்த இணையதளத்தால் news# 11855 & 11994 மற்றும் 11995 ஆகியவற்றில் சர்வே என்னுடன் விபரமாக வெளியிடப்பட்டது. இதில் news# 11855 & 11994 ஆகியவை (மொத்தம் 71.81 ஏக்கர்) 1976-ம் ஆண்டு வழங்கப்பட்டது. news# 11995 தகவலில் நூற்றுக்கும் மேலான புறம்போக்கு நிலங்கள் உள்ளதாக தெரிகிறது.
அரசு புறம்போக்கு நிலங்களை தற்போது யார், யார் ஹராமான முறையில் ஆண்டு, அனுபவித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த புறம்போக்கு நிலங்களை நம் நகராட்சி சார்பில் மீட்பதற்கு, தலைவி மற்றும் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் யாராவது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருந்தால், ஆதாரத்துடன் அவர்களின் (ஆக்கிரமித்தவர் & துணை போனவர்) பெயர்களை வெளியிடுங்கள். புறம்போக்கு நிலத்தை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும், மக்களின் துணையோடு அப்புறபடுத்துங்கள்.
தற்போது மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிட்டது, 2 தனித்தனியான திட்டங்களுக்காக. 1. குப்பை கொட்டுவதற்காக 2. பயோகாஸ் திட்டம். இதில் குப்பை கொட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியேயும் பயோகாஸ் திட்டத்திற்கு 20 சென்ட் மட்டும் ஒதுக்குபுறமாக இல்லாமலும் வேண்டும்.
இதில் குப்பை கொட்டுவதற்கு சென்ற நகர்மன்ற பதவி காலத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடமும் அடையாளம் காணப்பட்டது.
'ஐக்கிய பேரவை மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன் வந்த ஐந்து ஏக்கர் நிலத்தை - நேரமின்மை காரணமாக நேரடியாக பார்க்க முடியாததால், அந்நிலம் குறித்த விளக்கங்களை தயார் செய்து தனக்கு தரும்படி அங்கிருந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார். -(C&P)
நேரமின்மை காரணமாக நேரடியாக பார்க்க முடியாததால் அல்ல, மாறாக தலைவி அவர்கள் அந்த இடம் CRZ-க்கு உள்ளே வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் சொன்னதால்.
'(ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்கிறது. நகர்மன்ற முன்னாள் தலைவர் அவர்கள் நிலத்தை நம் நகராட்சிக்கு விலைக்கு தருவதாக கூறியுள்ளார். அதையே வாங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் காட்ட வேண்டும் என பெரும்பாண்மை உறுப்பினர்களும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் அடம்பிடிப்பது எதனால்? நூற்றுக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலமாக நகராட்சிக்கு உட்பட்டு கிடக்கும் போது விலை கொடுத்து வாங்குவது எதற்கு?
அப்படியே ஹாஜியாரின் நிலத்தை வாங்கினால் நீண்ட தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும் சில தனியார் நில உரிமையாளர்கள் அதற்கு சம்மதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியது சிந்திக்க வேண்டிய விஷயம். இனி நிலத்திற்கு ஒரு செலவு, சாலை அமைக்க ஒரு செலவு? இது தேவைதானா?
சுனாமி எல்லைக்கு உட்பட்ட நிலமாக இருந்தாலும் பெருங்கொண்ட தனவந்தரான முன்னாள் சேர்மன் நம் ஊர் நலனுக்காக சுமார் 20 செண்ட் நிலத்தை இலவசமாகத் தரலாமே? அதை விடுத்து நகராட்சிக்கு விற்பனை செய்ய முன் வருவது எதனால்?')- (C&P) இது சகோதரர் ரபீக் உடைய பதிவு.
எனக்கும் ஒன்று புரியவே மாட்டேங்குது. நீங்கள் தெளிவு படுத்தினால் புரியும்.
1. குப்பை கொட்டும் இடமும் Bio-Gas plant -ம் ஒரே இடத்தில் இருக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு இடத்தில் இருந்தால் பரவாயில்லையா?
2. வெவ்வேறு இடத்தில இருந்தால், bio-gas -க்கான மூல பொருள் என்ன? குப்பை கழிவிலிருந்து எரிவாயு தயார் செய்யும் பிளான்ட், குப்பை கொட்டும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தால் அதன் உற்பத்தி செலவு (Operation cost) என்ன?
3. சகோதரர் ரபீக் அவர்களே, ஹாஜியார் விற்க இருக்கும் 5 ஏக்கர் நிலத்திற்கு போக மற்ற நில உரிமையாளர்களிடம் சம்மதம் வாங்க வேண்டும், பின்னர் சாலை அமைக்க வேண்டும் அந்த செலவு தேவையா? என்று கேட்கும் நீங்கள், அவரிடம் 20 சென்ட் நிலத்தை மட்டும் CRZ- க்கு உள்ளே இருந்தாலும் இலவசமாக பெற்றால் மட்டும் அந்த செலவு வராதா? அப்போது அனுமதியும் கிடைத்து விடுமா?
4. நகராட்சிக்கு அரசு புறம்போக்கு நிலம் கிடைக்காத பட்சத்தில் ஹாஜியாரின் நிலத்தை வாங்குவதற்கு, தலைவியும் அவரின் தீவிர ஆதரவாளர்களும் எதிர்ப்பது ஏன்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross