மார்க்கம் எடுபட்டுவிட்டதா ??? posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[14 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30739
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாற்றை குறிக்கும் திரைப்படத்தை நம் தாய் மொழியில் மொழிப்பெயர்த்திருப்பது இஸ்லாமிய சமுதாயம் மட்டும் அல்லாமல் மாற்று மதத்தவர்களும் இஸ்லாத்தைப் பற்றிய உண்மையான வரலாற்றை உணர வேண்டும் என்பதற்காகவே.
ஒரு மனிதன் பிறந்து முதல் மூச்சை வெளியிடுவதிலிருந்து அவனுடைய கடைசி மூச்சு நின்று அவனை சவக்குழியில் அடக்கும் வரை உள்ள அனைத்திற்கும் இஸ்லாம் வழிக்காட்டுகிறது.
அத்தகைய நேர்வழியை கற்பித்துக் கொடுப்பதற்காகவே இறைவன் நபிமார்களை அனுப்பி வைத்தான் அதிலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதியாக அனுப்பி மார்க்கத்தை பூர்த்தி செய்தான்.
---------------------------------
அவர்களுடைய வரலாற்றை சொல்லக்கூடிய சீடி’யை வெளியிடும்போது அவர்கள் நமக்கு கற்பித்துத்தந்ததை காற்றில் பறக்கவிட்டது ஏன்??? – அதோ அந்த பெண்ணை பாருங்கள் தலையில் முக்காடு இல்லாமல், கையில் நெட் வைத்து தைத்த சட்டையை அணிந்து அக்குள்வரை காட்டிக்கொண்டு நிற்பதை – இதுதான் இஸ்லாம் மக்களுக்கு போதிக்கிறதா ?. ஏன் இந்த நிலை ? எதற்காக அதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் , கவிக்கோ அப்துர்ரஹ்மான் அவர்கள் மற்றும் பல முஸ்லிம்கள் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் யாராவது ஒருவர் அந்த பெண்ணுக்கு சொல்ல வேண்டாமா! முக்காடு போடு என்று!!.
ஒரு வேளை அந்த பெண் முஸ்லிம் அல்ல என்றாலும்கூட அந்த சபையிலே பல ஆண்களுக்கு மத்தியிலே வரும்போது, அதுவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்று சீடி’யை வெளியிடும்போது அந்த பெண்ணை வற்புறுத்தி முக்காடு இட சொல்லனும் அல்லது அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.
யாராவது அந்த பெண்ணிடம் சொல்லியிருந்தால் அதுவும் அந்த பெண் முஸ்லிமல்லாதவராக இருந்தால்கூட நிச்சயமாக ஏற்று முக்காடு அணிந்திருப்பார்.
அதை ஏன் அவர்கள் செய்ய வில்லை – அவர்களை செய்யவிடாமல் செய்தது எது பணமா ? இல்லை பதவியா ?? அல்லது அவர்களிடமிருந்து மார்க்கம் எடுபட்டுவிட்டதா ??? – சிந்தியுங்கள் மக்களே! சிந்தித்து செயலாற்றுங்கள்.
----------------------
கவிக்கோ அவர்கள் முகத்தில் புன்னகை இல்லை கடுகடுப்பாக தோன்றுகிறார்கள் – ஒரு வேளை அந்த பெண்ணின் கோலத்தை மனதால் வெறுத்து கடுகடுப்பாக இருக்கிறாரோ? என்னவோ ?? அல்லாஹ்! அறிவான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross