அன்பொழுகும் நல்வாழ்த்துக்கள்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[14 October 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30740
அல்லாஹ்வின் வீட்டை அழகிய முறையில் அரும்சேவை செய்ய அங்கீகாரம்பெற்ற 55 அன்பு சகோதரர்களே, உங்கள் அனைவர்களுக்கும் இந்த ஆதம் சுல்தானின் அன்பொழுகும் நல்வாழ்த்துக்கள்!
நீங்கள் பெற்றது வெற்றி என்று ஊராரும்,உங்கள்
உள்மனதாலும் உவகையால் உணர்தாலும் ,
உங்களையறியாமல் உங்கள் மேலுள்ள தொண்டின் சுமையின் நெருக்கமும்,தாக்கமும் சில சமயங்களில் திக்குமுக்காட வைத்து விடும்,அந்த நேரத்தில்தான் அல்லாஹ்வின் உண்மைஊழியனாய் உள்ளச்சத்தோடு,
உணர்சிகளை ஒடிக்கிகொண்டு,காய்தல்,உவத்தல் இன்றி நேர்மையான நடுநிலை நீதத்தை நிலைநிறுத்த உங்கள் நிலைப்பாட்டை செயலில் காட்ட வேண்டும்!
எந்த ஒருமித்த ஆலோசனை கூட்டத்தையும் எளிதாக நினைக்காமல் கண்டிப்புடன் கலந்து கொள்ளுங்கள்!வெளியூரில் இருந்தாலும் ஊரோடு தொடர்பில் இருப்பதை தாமதமாக்கிகிக் கொள்ளவேண்டாம்,ஏனனில் அத் தாமதமே நீண்ட துண்டிப்புக்கு வழிகோலாகிவிடும்!
அணிதிரளட்டும் 55 அருஞ்சேவை தொண்டர்காள்! அல்லாஹ்வின் பணிக்கு உங்களை அர்பணித்த
அப்புண்ணிய சேவையைப்பார்த்து பெருமைபடவேண்டும் இந்தநிர்வாகம! இன்னும் எமதூரின் ஏனைய நிர்வாகத்தின் நியாயஉணர்வுள்ள நடுநிலையானவர்களின் நெஞ்சங்களிலும் நீங்கள் நீங்காஇடம்பெற்று மெருகூறியமாணிக்கங்களாய்
மிளிரவேண்டும்.இன்ஷாஅல்லாஹ்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross