சர்வே எண் 278-ம் சில கேள்விகளும் posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[25 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30952
சர்வே எண் 278-ல் ஹாஜி WSAR அவர்கள் 5 ஏக்கர் தர சம்மதம் மற்றும் நம் நகர்மன்றம், குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க நிலம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்!
இந்த தீர்மானம் நிறைவேறிய பின் இந்த இணையதளம், தீர்மானத்திற்கு எதிராக 3 வெவ்வேறு தலைப்பின் கீழ் செய்தி (news# 12154, 12156 மற்றும் 12157) வெளியுட்டுள்ளது. அதன் நோக்கம் எக்காரணம் கொண்டும் அந்த திட்டம் சர்வே எண் 278-ல் வந்து விடக் கூடாது என்பது தான், ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? சில விளக்கங்களுக்கு உங்கள் இணையத்தளத்தில் சார்பாக, தலைவி அல்லது அவர்களின் விபரம் அறிந்த ஆதரவாளர்கள் சார்பாக பதில் எதிர்பார்கிறேன்.
அட்மின் அவர்கள் கேட்கலாம். நாங்கள் செய்தியைத்தனே போட்டோம். இதில் என்ன காழ்ப்புணர்ச்சி? என்று. நீங்கள் போட்ட செய்திகளில் மாற்று கருத்து உடையவர்களின் நிலைப்பாட்டையும் செய்தியோடு போட்டு இருந்தால் நடுநிலையாக இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
News# 12154 பற்றி. மாவட்ட ஆட்சியர் அவர்களின் தல ஆய்வு (Field report) அதில்
>>' மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்' (C&P)
மாவட்ட ஆட்சியர் அவர்களே பரிந்துரை செய்துள்ளார்கள். ஆனால் தலைவி அவர்கள், அந்த பரிந்துரை போதாதென்று, அந்த இடத்தில் இரண்டு திட்டங்களும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
news# 12156, சென்னை நகராட்சி நிர்வாகத்துறையின் பொறியாளர், காயல்பட்டினத்தில் ஆய்வு!
சர்வே எண் 278 இடத்தை பார்வையிட்ட பொறியாளர், இந்த இடம் தனியார் வசம் உள்ளதால் திட்டப்பணிகளை இங்கு அமல்படுத்த சில சிக்கல்கள் உள்ளன என தெரிவித்தார்.(C&P)
மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த அந்த இடத்தில் என்ன சிக்கல் என்று சொன்னார்?
News#12157, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறியாளர் சர்வே எண் 278 இடத்தினை ஆய்வு செய்தார்
!
அப்போது பொறியாளர் கோகுல்தாஸ், பயோ காஸ் திட்டத்திற்கு இவ்விடம் பொருத்தமில்லை என கருத்து தெரிவித்தார். குப்பைகளை கொட்ட தேர்வு செய்யப்படும் இடத்தினை சுற்றி, எந்த வளர்ச்சிப் பணிகளுக்கும் அனுமதி இல்லை (NO DEVELOPMENT BUFFER ZONE) என நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மேலும் கோகுல்தாஸ் தெரிவித்தார். (C&P)
இந்த விதிமுறையால், முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன்வந்துள்ள 5 ஏக்கர் நிலத்தினை தவிர்த்து - அவரின் இந்த சர்வே எண் (278) நிலத்தில் உள்ள ஏனைய நிலப்பகுதியிலும், (குப்பைகள் கொட்ட வழங்கப்படும் நிலத்தின் எல்லைகள் எவ்வாறு அமையும் என்ற அடிப்படையில்) இந்த சர்வே எண்ணை சுற்றியுள்ள பிற சர்வே எண் நிலங்களிலும், எந்த வளர்ச்சிப்பணிக்கும் அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவரும், இதனால் பாதிக்கப்படும் இதர நில உரிமையாளர்களும் சம்மதம் தெரிவிப்பார்களா என்பதும் தெளிவில்லை.(C&P)
இது உங்கள் நிருபரின் கைவண்ணம்.
தற்போது நமது நகரின் குப்பைகள் எங்கே கொட்டபடுவது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அந்த குப்பைகள் LF ரோட்டுக்கு பின்புறமுள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில்தான். தப்லீக் இஜ்திமா நடைபெற்றது அந்த இடத்தின் அருகில்தான். இதை விட கொடுமை என்ன தெரியுமா?
நாம் தினமும் சாப்பிடும் ஆட்டு இறைச்சி அறுக்கப்படும் இடம் இந்த குப்பை கொட்டும் இடத்தை அடுத்தது தான். குப்பை கொட்டும் இடத்தை சுற்றி எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு விதிகள் சொல்ல, அதை அடுத்து நகர்மன்றத்தால் நிர்வகிக்கப்படும் ஆடு அறுக்கும் இடம் (slaughter house) உள்ளது. அப்படி ஒரு சூழல் பற்றி தலைவிக்கு தெரியுமா? அல்லது இந்த இணையதளத்தின் நிருபர் தான் அப்படி ஒரு சுகாதாரக்கேடு இருப்பதி பற்றி செய்தி வெளியிட்டுள்ளாரா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross