சமீப காலமாக எனது அருமை காக்கா மூஸா நெய்னா அவர்கள் எழுதும்
கருத்துக்கள் நகைப்பிற்கும், வியப்பிற்கும் உரியதாய் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.. தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது வைத்திருக்கும்
மரியாதை காரணமாக , நடப்பது என்ன என்பதனை அறியாமலே
கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தும் அவருக்கு பதில் எழுத வேண்டியது இல்லை என நினைத்து இருந்தேன்....
யார்மீதோ,எதற்காகவோ தெரியவில்லை....அவரது
காழ்ப்புணர்ச்சி எல்லை தாண்டிய கருத்து குதர்க்கத்தை விதைத்துக்
கொண்டிருக்கிறது....
ஷிஃபா என்ற அமைப்பு இருக்கும் போது மைக்ரோ காயல் எதற்கு
ஆரம்பிக்க வேண்டும்...இந்தக் கேள்வியை பார்த்ததும் வெளிநாட்டு
மன்ற உறுப்பினர்கள் சிரிக்க மாட்டார்களா? அல்லது உங்கள் மன்றத்துடன் உங்களுக்கு ஒட்டுறவே இல்லையா? அப்படி இருந்தால்,
அவர்களிடம் நடப்பைக் கேளுங்கள்....
இப்படி அடிப்படையே தெரியாமல்
நீங்கள் அள்ளி வீசுவதால்தான், உங்களது கருத்துக்கள் காற்றிழந்த
பலூனாக வலுவிழந்து போகிறது....
அது மட்டுமல்ல....நீங்கள் எப்போதும் குதறி எடுக்கின்ற அந்தப் பத்து
பதினைந்து நபர்களும்,இக்ராவின், ஷிஃபாவின் பின்னணியில் இரும்புத்
தூண்களாக இயங்கிக் கொண்டிருப்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
காக்கா அவர்களே! உங்கள் பார்வையில் ஃபித்னா என்பதன் அர்த்தம்
என்ன? உண்மையை உரக்கச் சொல்வதா? அப்படி சொல்வதுதான்
ஃபித்னா என்றால் அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்....அல்லாஹ்வின் உதவியால் எந்த தீய விமர்சனங்களும்
எங்களை பாதிக்கப் போவதில்லை....காரணம் நாங்கள் எதையும்
எதிர்பார்த்து இதைச் செய்ய வில்லை....நீங்களும் வாருங்கள்....அமர்ந்து
உரையாடுவோம்....உங்கள் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல
எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை...
உங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் எங்களுக்குத் தேவை....
ஒன்றிணைவோம்....உண்மையை இன்னும் இன்னமும் உரக்கச்
சொல்வோம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross