செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
MEGA -க்கு சில கேள்விகள். posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[26 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30999
அல்லாஹ், யூதர்களை பற்றி குறிப்பிடும்போது, "எனவே வேதத்தில் சிலவற்றை நம்பியும் வேறு சிலவற்றை நிராகரித்தும் வருகின்றீர்களா? உங்களில் இதனைச் செய்பவர்களுக்கு இந்த அற்ப வாழ்வில் இழிவைத் தவிர வேறு பிரதிபலன் இல்லை.(அல்-குர்ஆண் 2:85)
இதே மாதிரித்தான் நீங்கள் வெளியிட்டுள்ள பிரசுரமும். மக்களுக்கு உங்களின் தரப்பை சொல்லும்போது முழுமையாக சொல்லுங்கள். இந்த Bio-gas திட்டத்தை மட்டும் கையிலெடுத்து குப்பை கொட்டும் திட்டத்தை, உங்கள் வசதிக்காக மறந்து விட்டீர்கள்.
ஆனால் நீங்கள் போற்றும் தலைவி அவர்கள், 09.08.2012-ல், ஐக்கிய பேரவை உட்பட அனைத்து ஜமாஅத்திற்கும் எழுதிய கடிதம், மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நினைப்பா?
அதில், "நகராட்சிக்கு என பிரத்தியேக குப்பைகள் கொட்டும் இடம் இல்லாததால் - அதற்கு தேவைப்படும் 5 ஏக்கர் நிலம் கிடைக்கும் பட்சத்தில், அதே இடத்தில, Bio-Gas Plant க்கு தேவையான 10 சென்ட் நிலத்தையும் நாம் ஒதுக்கலாம். எனவே - நகரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவைக்கான நிலம் வைத்துள்ளவர்கள், இந்த முக்கிய பணிக்கு இடம் தந்து உதவிடும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். இந்த பணிகள் அனைத்தும் இறைவன் உதவியுடன் நிறைவேறினால் - கூடிய விரைவில் - குப்பைகள் தெருக்களில் தேங்காத நகராக நம் நகரை நாம் மாற்றிவிடலாம்".(C&P)
அந்த கடிதம் கொடுத்த நேரத்தில், ஊரில் புறம்போக்கு நிலம் இருப்பது, இந்த தலைவிக்கு தெரியாதா?
1. இந்த இரண்டு திட்டமும் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டுமா? அல்லது வெவ்வேறு இடங்களில் இருந்தால் பரவாயில்லையா? ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் குறிப்பிடும் அந்த சர்வே எண்களில், அவ்வளவு பெரிய இடம் உள்ளதா? இந்த இரண்டு திட்டமும் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று நம் தலைவி சொல்லுகிறார்கள்,
2. உங்கள் பிரசுரம்படி, நம் நகரில் தினசரி 8.00 MT குப்பை சேர்க்கிறது. அதில் 40% (3.20 MT) மட்டுமே மக்கும் குப்பை. மீதி 4.80 MT மக்காத குப்பை. இந்த மக்கும் குப்பையை நீங்கள் குறிப்பிடும் BIO-GAS PLANT -ல் கொட்டினால், மீதம் உள்ள 4.80 MT. (இது மக்காத குப்பை) (ஒரு வருடத்திற்கு 1,750 MT சேரும்) அதை எங்கே கொட்டுவீர்கள்?
3. இரண்டு திட்டங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் போது, மக்கும்/ மக்காத குப்பையை எவ்வாறு பிரிப்பார்கள்? தற்சமயம் நம் மக்கள் ஒரு வாளி வைத்து அதை கொட்டவே சோம்பல், அலட்சியம் படும்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று 2 வாளியில் குப்பையை பிரித்து தருவார்களா? நாம், நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களும் பிரித்து தந்து, ஒரே குப்பை வண்டியில் 2 பிரிவு (chamber) வைத்து சேகரித்து, மக்கும் குப்பையை ஊருக்கு அருகிலுள்ள bio-gas plant- ல் கொட்டிவிட்டு மீதியை ஊருக்கு வெளியில் உள்ள உரக்கிடங்குக்கு தினமும் கொட்டும் போது, அதற்கான transportation cost, (on long run) எவ்வளவு ஆகும்? நகராட்சி சார்பில் ஒவ்வொரு தெருவிலும் வைத்துள்ள குப்பை தொட்டிகளிலும் (Dumber Placer Bin), மக்கும் / மக்காத குப்பைக்கு என்று தனி பிரிவு இல்லை.
4. தற்போது நம் நகரில் சேரும் குப்பைகளை எங்கே கொட்டுகிறார்கள் என்று தெரியுமா? அந்த குப்பைகள் LF ரோட்டுக்கு பின்புறமுள்ள தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள நிலத்தில்தான். இதை விட கொடுமை என்ன தெரியுமா? அந்த குப்பை கொட்டபட்டிருக்கும் இடத்த ஒட்டி தான், நம் நகர்மன்றதிற்கு சொந்தமான ஆடு அறுக்கும் இடம் (slaughter house) உள்ளது. நாம் தினமும் சாப்பிடும் ஆட்டு இறைச்சி அறுக்கப்படும் இடம் இதுதான். குப்பை கொட்டும் இடத்தை சுற்றி எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு விதிகள் சொல்ல, அப்படி ஒரு சூழல் பற்றி தலைவிக்கு தெரியுமா? அதை பற்றி உங்கள் அமைப்பு எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன?
5. தற்போது கொட்டப்படும் இடத்தில் மக்காத குப்பையை கொட்டிவிட்டு, நீங்கள் குறிப்பிடும் சர்வே எண் 392/5 -ல் Bio-gas plant ல் மக்காத குப்பையை கொட்டவேண்டும் என்றால், இரண்டு இடத்திற்கான தூரம் 3 கீ.மீ.
ஆனால் நீங்கள் குறிப்பிடும் சர்வே எண் 334/1,334/2 ஆகியவற்றிற்கு, தற்போது கொட்டும் இடத்தில் இருந்து 5 கீ.மீ. நகராட்சியில் எத்தனை குப்பை லாரி மூலம் குப்பை அள்ளபடுகிறது? ஒரு நாளைக்கு, 1 குப்பை லாரி (1 TRIP) வீதம்,வருடத்திற்கான TRANSPORTATION COST எவ்வளவு? என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross