செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெருந்துரோகம் posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[27 October 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31005
ஏதோ M.K.T. அப்பா, பாவலர் அப்பா, L.K. மாமா காலத்தில் அவரவர்கள் பதவியிலிருக்கும் போது அந்த இடத்தில் குப்பைகொட்டும் திட்டத்தை அமுல்படுத்தாமலிருந்தற்கு இவரிடம் காரணம் சொன்னது போல கருத்து எழுதுகின்றனர் சிலர். இவர்கள் கூறிய காரணம் உண்மையாக இருந்திருந்தால் ஆதாரம் தரவும்.
ஒரு வேலை அந்த குறிப்பிட்ட இடத்தில் குப்பை கொட்டுவதற்கு அப்போது அவசியம் ஏற்படாமலிருந்திருக்கலாம் அல்லவா ?
Technical & safety : மயான இடம் நமதூர் மத்தியில் அமையவில்லை. ஊர் எல்லைக்கு வெளியில்தான் அமைந்துள்ளது. அபு ருஸ்தாவை விட தமிழக அரசுக்கும் அதன் பொறியாளர்களுக்கும் Technical & Safety யை பற்றி நன்கு தெரியும். அது மற்றுமல்ல மயான நிலம் போக 2 ஏக்கர் நிலம் அங்குள்ளது என்பது குறிப்பிட தகுந்தது.
Gas Plant ஐப் பற்றிய ஞானம் எனக்கில்லாததால் கிட்டத் தட்ட 40 வருடங்களாக Tarapore ( Maharashtra) வில் Gas Plant ஐ நடத்திவரும் நமதூரைச் சார்ந்த ஒரு பொறியாளரிடம் (B.E., M.B.A) விசாரித்ததில், Bio-Gas plant அபு ருஸ்தா Built up கொடுத்த மாதிரி மிக ஆபத்தான Plant இல்லை என்பதை அறிய முடிந்தது.
ஒரு வேலை எதிபாரா விதமாக ஒரு பெரிய விபத்து/ விபரீதம் நடந்தாலும் அதன் தாக்கம் அந்த Plant எரியாவைத் தாண்டி இருக்காது என்பது அந்த பொறியாளரின் கருத்து.
அது மட்டுமல்ல எனக்கு கிடைத்த தகவலின் படி Pune யில் (Maharashtra) ஒரு ஏரியாவில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு Bio-Gas Plant அமைத்துள்ளார்கள்.
ஆதலால் Bio-gas plant பற்றிய ஞானம் இல்லாதவர்கள் அது பற்றிய ஞானம் இருப்போரிடம் விசாரித்து தெரிந்து கொண்டு எழுதவும்.
கவுன்சிலர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம் பல காரணங்களால் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட இடம். அப்படியிருந்தும் அந்த தீர்மானத்தை செயல்படுத்த முனைவது அந்த ஏரியா நிலச்சுவான்களை பெரும்பலன் அடையச் செய்வதற்கும் அதன் மூலம் குளிர்காய்வதற்கும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமேயன்றி வேறு காரணங்கள் இருக்க முடியாது. இது நமதூர் மக்களுக்கு செய்யும் பெருந்துரோகம்.
தலைவியின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்பதற்காக மறுதரப்பினரை (கண்மூடித்தனமாக) ஆதரிக்க வேண்டாம். அப்படியே ஆதரிக்க வேண்டும் என்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டால் அதற்காக அவர்களின் தவறான முடிவை ஞாயப் படுத்தவேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross