செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அறிந்து கொள்வோம். posted byOMER ANAS (DOHA QATAR..)[27 October 2013] IP: 37.*.*.* | Comment Reference Number: 31006
இங்கே மக்கள் அறிந்து கொள்ள வேண்டி தெளிவாக விளக்கம் தந்து கொண்டிருக்கிறார் சகோதரர்,சாளை அப்துல் ரஸ்ஸாக். நல்ல விளக்கம். சிலர் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே புரியும்படி விளக்கம் தருகின்றனர்., மற்றவர்கள் சொல்வது கனா கண்டு சொல்வது போல் திரிக்கப் பார்க்கின்றனர்.
அது போல் தலைவி மீது வெறுப்பு காரணமாக உறுப்பினர்களுக்கு கண்ட மேனி ஆதரவு கொடுப்பதாகவும் நினைக்கின்றனர். பதிகின்றனர். அப்படி என்றால்,நீங்கள் மொத்த உறுப்பினர்களின் மீதும் வெருப்பால்தான் இந்த மாற்றுத்திட்டத்தை கையில் எடுத்துள்ளீர்களா? அதனால்தான் மாற்று பெயர் புனைந்து வந்திருக்கும் மெகா உறுப்பினர்கள் மீது வெறுப்பை காட்டி முதல் கோரிக்கையினை தலைவி ஆதரவுக்காக கையில் எடுத்து திசை திருப்ப நினைக்கிறது என்றல்லவோ நடுத்தர மக்கள் நினைப்பார்கள்,சிந்திப்பார்கள்..
நிலங்களை வைத்து ஆதாயம் தேடுவோர் யார் இல்லை அப்படி என்றால் இந்த இடத்தை சிபாரிசு செய்து மல்லு கட்டுகிறீர்களே இங்கே உங்களுக்கு வேண்டப்பட்ட நிலம் எகிரனும் என்றுதான் இந்த திட்டம் என்று மக்கள் நினைக்கப் போகிறார்கள்.
ஆகவே மக்களிடம் போய் சேரவேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கிறது அதில் முதல் கோரிக்கை அடிப்படை தண்ணீர். அதை கையில் எடுத்து மோட்டார் போட்டு உறிஞ்சுவோர். கிணற்றிலே வெட்ட வெளிச்சமாக மக்கள் அறியும் இடத்தில் ஓட்டை போட்டு குழாய் இறக்கி தினமும் தண்ணீர் பிடிப்போர், இவர்களை இனம் கண்டு மக்கள் முன் இனம் காட்டுங்கள்!.
அன்றைய இன்றைய பெரியவர்களின் நெடுந்தூர சிந்தனையை இனியாவது கொச்சை படுத்து முகமாக பதியாதீர்கள். இப்ப விடுங்க சார் உறுப்பினர்களை! அடுத்த தேர்தல் வரும் அப்ப யாரை கொண்டு வரலாம் வரக்கூடாது என்று ரூம் போட்டு பேசுவோம்!
.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross