தம்பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் தனது கருத்துப் பதிவில், நஹ்வி அஹமத் மெய்தீன் மச்சான் அவர்களைப் பற்றி எழுதியுள்ள கருத்தை வாசிக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.
பொதுவாழ்வில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் தம்பி
ஆப்தீன், தனது முஹல்லா வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரு முறை வார்டு மெம்பராக வாய்ப்பு கிடைத்தும், முஹல்லாவின் நன்மைக்காக தான் சார்ந்திருக்கும் கட்சியின்
கோரிக்கையை நிராகரித்தவர் அஹமத் முஹைதீன் மச்சான் அவர்கள்.
சட்டமன்ற, நகரமன்ற தேர்தல் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட காலம் அது. அண்ணா தி.மு.க.சார்பில் போட்டியிடவிருந்த மச்சான் அவர்கள், முஹல்லாவாசிகளின் வேண்டுகோளையேற்று,
அப்போதைய தி.மு.க. மாவட்டப் பிரதிநியான எதிர்க்கட்சியை
சேர்ந்த ஒருவரை ஆதரித்து, தேர்தல் பணியாற்றியதோடு, தனது
சொந்தக் கட்சியை எதிர்த்து தி.மு.க.வேட்பாளரின் தேர்தல்
ஏஜென்டாக பணியாற்றிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
அந்த வேட்பாளர் யார் என்பதாவது தெரியுமா? அவர்கள் உங்களது
பாட்டனாரும், எனது மரியாதைக்குரிய மாமாவும், எம்.இ.எல்.நுஸ்கி மச்சான் அவர்களது தந்தையும், ஊர் அறிந்த தி.மு.க.பிரமுகரும், சமுதாயத் தொண்டருமான மர்ஹூம். சொளுக்கு முஹம்மத் ஈசா லெப்பை மாமா அவர்கள்... ஆதாரம் வேண்டும் எனில், ஜமாஅத்தின் நன்மையைக் கருதி அஹமத் முஹைதீன் மச்சான் அவர்களுடன் இணைந்து தேர்தல் ஏஜென்டாக பணிபுரிந்த இன்னொரு அண்ணா.தி.மு.க.பிரமுகர் ஆன சகோதரர் எம்.ஜே.செய்யத் இப்ராஹிம் காக்கா அவர்களைக் கேளுங்கள்... அண்ணா.தி.மு.க. பூத் ஏஜென்டாக இருந்த சொளுக்கு செய்மூசா மச்சான் அவர்களிடம் கேளுங்கள்....
மற்றொருமுறை வார்டு மெம்பராக போட்டியிட ஜமாஅத்
வலியுறுத்திய போது, தன்னை விட இந்தப் பதவிக்கு பொருத்தமானவர் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்கா அவர்கள் எனக் கூறி, பிறிதொரு கட்சியை சேர்ந்தவரை வேட்பாளாராக்கி, வெற்றி பெறச் செய்த அவர்களது பெருந்தன்மையையும், கட்சி என்ன? தனது குடும்பத்தை விடவும் முஹல்லாவை அதிகம் நேசிக்கக் கூடிய ஒரு நல்ல மனிதரின் இதயத்தையும் புரிந்து கொள்ளுங்கள்....
எந்த ஒரு போராட்டமும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் படும் வரைதான்... கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டு,செயல்பாடுகள்
ஆரம்பிக்கப் பட்டபின் அந்தப் போராட்டத்தை தொடர்வது வெறும்
ஸ்டண்ட்.... அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற
அவரது கூற்று பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடு....
முஹல்லாவிற்காக அஹமத் முஹைதீன் மச்சான் அவர்கள்
மனதாலும், உடலாலும் பட்ட காயங்களும், பல்வேறு வழக்குகளை சந்திக்க நேரிட்டு பெரும் அவதிக்குள்ளானதும் முஹல்லா வாசிகள் யாவரும் அறிந்ததே....
ஆகவே,தம்பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள்,
எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் கூறிய குற்றச்சாட்டை
திரும்பப் பெறுவது, அவரது பொது வாழ்க்கைக்கு மேலும் அழகு
சேர்க்கும் என்பதே எனது கருத்து.....
தெரு விளக்குகள் பொருத்துவது தாமதமாவதைக் குறித்து
ஒருசில காக்காமார்கள் தம்பிமார்களுக்கு தருகின்ற கருத்துகளும்,
காரணங்களும் சரிதானா என்பதனை ஆதாரங்களுடன் அறிந்து
கொள்ள நேயர்களே காத்திருங்கள்.... உண்மைகள் சற்றே உறங்குகிறது... அதுவரை பொய்களின் ஊர்வலம் தொடரட்டும்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross