ஆலிம்கள் குறித்த கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை. posted byyahya mohiadeen (dubai)[24 November 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31651
அறிவியலை ஒதுக்கிவிட்டு ஆலிம்கள் சொல்வதை மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுங்கள் என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அறிவியலாரும், ஆலிம்களும் ஒன்றிணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு ஒரே அறிவிப்புகள் செய்யும்படிதான் கேட்டுக்கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒருமுறை நிதானமாக நமது கருத்துகளை படித்தால் புரிந்துகொள்ளமுடியும்.
மேலும், இது ஒரு சிந்தனைகளை பரிமாற்ற தளம். A platform for exchange of thoughts. We believe that everyone has equal rights and liberty to express their ideas bravely and without any hesitations. அதே சமயம், மற்ற கருத்தாளர்களையும் அவர்தம் வாதங்களையும், மதிக்கும் பண்பை, அந்த நாகரிகத் தன்மையை போதிய அளவு பெற்றிருக்கிறோம் என்பதை இங்கே அடக்கத்துடன் தெரிவிக்கிறோம்.
இதற்கு சான்றாக, நம்முடைய பிற கருத்துகளை பார்த்ததால் அறிய முடியும். எழுதப்பட்ட கருத்துகள் கொஞ்சமாயினும், தணிக்கை செய்யப்படாமல் வெளிவந்திருக்கும்.
என்றைக்குமே, அறிவியலை குர்ஆணோடும், ஹதீதோடும் தான் ஒத்துப்பார்கவேண்டுமே அன்றி குர்ஆன் வசனங்களையும், ஹதீது மணி மொழிகளையும், அறிவியலோடு ஒத்துப்பார்க்கலாகாது. உரைகல் குர்ஆணாகவும் ஹதீதாகவும் தான் இருக்க வேண்டும். இல்லையெனில், டார்வின் கொள்கைகளை ஏற்கவேண்டியது வருமே. எத்தனை ORANGUTAN கள் இதுவரை மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன? நாம் யாரும் இக்கொள்கையை ஏற்றுகொள்ளவில்லை என்பதும் உண்மை.
எங்கோ ஒரு தாக்குதல் குறிப்பிட்ட வெறியர்களால் நிகழ்த்தப்பட்டால் ஒட்டுமொத்த ஆலிம் சமூகத்தை குறைகூறுவது அறிவுடைமை ஆகுமா? நமதூரின் ஆலிம்கள், இந்த சிந்தனையிலா இருக்கிறார்கள்? ஒருகாலத்தில் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கியதாக நாம் கேள்விபட்டிருக்கிறோம். இதற்குரிய காரணங்களை அறிய முற்பட்டோம். தாய் நாட்டை நேசிப்பது ஈமானில் ஒரு பகுதி என்பதாலும், ஆங்கிலேயர்களின் தயாரிப்புகளை ஒட்டுமொத்தமாக எதிர்க்கையில், அவர்களின் மொழியையும் எதிர்க்க நேர்ந்தது. அவ்வளவுதான்.
ஆனால், இன்றைய சூழ்நிலை அப்படியல்ல. எத்தனையோ இளம் ஆலிம்கள் நமதூரில் உருவாக்கி விட்டனர். அவர்களுள் குர்ஆணை மனப்பாடம் செய்த ஹாபிழ்களும், அடங்குவர். மேலும், ஹாபிழ் மற்றும் ஆலிம் கல்வி பயிலும்போதே M Com, M B A போன்ற முதுநிலை கல்வியும் கற்று வெளி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், M Phil, படித்தவர்களும் Phd செய்து கொண்டு, கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றிக்கொண்டும், மார்க்கப் பணியாற்றிக்கொண்டும் இருக்கும் 40 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை காட்ட முடியும்.
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ என்பதற்கு "(நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்கவேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? என்பது வெளிப்படையான அர்த்தம், இன்றைய ஆலிம்கள், ZOOLOGY படியுங்கள் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான் என்கின்றனர்.
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ என்பதற்கு (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? என்பது வெளிப்படையான அர்த்தம், இன்றைய ஆலிம்கள், ASTRONOMY படியுங்கள் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான் என்கின்றனர்
உதாரனத்திற்க்கு இவ்விரண்டை மற்றுமே இங்கே குறிப்பிடிருக்கிறேன். இன்னும் அநேகம் உள்ளன.
இதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் தூய கொள்கைகளை மக்களுக்கு போதிக்கவும் வேண்டும், அதே சமயம், இஸ்லாத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும், வரக்கூடிய அவதூறுகளுக்கும், நட்ச்சுக்கருத்துகளுக்கும் பதில் சொல்லவும் வேண்டும். இக்காரியங்களை நல்லபடி செய்தே வருகின்றனர்.
பிறை பற்றிய சர்ச்சை ஒரு பொதுவானது. இது மட்டுமின்றி, நமதூரில் பல்வேறு குடும்பங்களில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளனவே. கணவன்-மனைவி பிரச்சனைகள் , பெற்றோர்-பிள்ளைகள் பிரச்சனைகள் , தொழில் துறைகளில் பங்காளிகள் மத்தியில் பிரச்சனைகள், நிலத்தகராறுகள், உறவினர்களுக்கு மத்தியில் உள்ள பாகப்பிரிவினை பிரச்சனைகள் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றனவே, இவற்றிற்கான தீர்வுகள் எங்கே, யாரால் வழங்கபடுகின்றன என்பதை கொஞ்சம் அறிய முற்படுங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும், நீதிமன்றத்தை அணுகினால், நமதூர் மக்களின், பொருளாதார நிலை என்றோ சரிவை கண்டிருக்கும். அல்லது, நமதூர் வழக்குகளுக்கேன்றே தனி நீதிமன்றம் தேவைபட்டிருக்கும். ஒரு சில ஆலிம்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததால் இவற்றை இங்கே குறிப்பிட முடிகிறது.
மொத்தத்தில் ஆலிம்கள் குறித்த கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை. ஒரு சமூகத்தை பற்றி அரைகுறையாக தெரிந்துகொண்டு, இவர்கள் இப்படித்தான் என்று சொல்வது எப்படி முறையாகும் சகோதரர்களே?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross