Re:... posted bySalih (Chennai)[13 January 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32452
வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் - மூன்று பாடங்களில் நிறைய மதிப்பெண்களும், நான்காவது பாடத்தில் - ஆங்கிலம்/மொழி பாடம் போல குறைவான மதிப்பெண் எடுத்தாலும் (பிரசுரத்தில் காட்டப்பட்டுள்ள உதாரணம் 120 மதிப்பெண்) சரி என்று மாணவர்களுக்கு அறிவுரை சொல்லப்பட்டுள்ளது.
பிரசுரத்தில் - நான்காவது பாடம், ஆங்கிலம் / மொழிப்பாடம் போல், ("துணைப்பாடங்கள்") முக்கியம் இல்லாதது என்ற அடிப்படையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் மொத்த மதிப்பெண் பங்கு வகிக்கும் என நான் கூறவில்லை. தமிழக அரசின் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் - நான்காவது பாடமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே என் கருத்தைப் பதிவு செய்தேன்.
2012ஆம் ஆண்டு மாநில தேர்வு முடிவுகள் மூலம் இதனை விளங்கலாம்.
2012ஆம் ஆண்டு நடந்த மருத்துவ படிப்பிற்கான முதல் சுற்று கலந்தாய்வின் (கவுன்சிலிங்) நிறைவில் - 197 கட் ஆப் பெற்றிருந்த கலீல் என்ற மாணவர் - வேலூர் மருத்துவக்
கல்லூரியில் இணைந்தார். அவர்தான் - முதல் ரவுண்டு கவுன்சிலிங்கில் முஸ்லிம் சமுதாயத்தில் (BCM) இருந்து தேர்வான இறுதி மாணவர்.
அவர் பெற்றிருந்த 197 கட் ஆப் மதிப்பெண்ணை, இதர 8 மாணவர்களும் பெற்றிருந்தனர்.
சமுதாய தர வரிசைப் பட்டியலில் (COMMUNITY RANK LIST) அந்த மாணவர்களின் தர வரிசை கீழ்க்காணுமாறு வெளியிடப்பட்டிருந்தது.
[சமுதாய ரேங்க் 51] ASIMA PARVEEN
[சமுதாய ரேங்க் 52] KALIL F
[சமுதாய ரேங்க் 53] NASREEN FATHIMA M
[சமுதாய ரேங்க் 54] MOHAINUDHEEN SHARUK S
[சமுதாய ரேங்க் 55] SHAHUL HAMEED A
[சமுதாய ரேங்க் 56] SYED AAMIR AHMED
[சமுதாய ரேங்க் 57] SHAJAHAN S
[சமுதாய ரேங்க் 58] KATHEEJATHUL SALIHA R
[சமுதாய ரேங்க் 59] VASIMA S
இவர்கள் அனைவரின் கட் ஆப் 197 மதிப்பெண்கள்தான். இவர்கள் அனைவரின் மொத்த மதிப்பெண்கள் (Total Marks) - முறையே - 1160, 1153, 1162, 1164, NON_STATE_BOARD, NON_STATE_BOARD, 1152, NON_STATE_BOARD, 1152. இவர்களின் தரவரிசைப் பட்டியலை அவர்களின் மொத்த மதிப்பெண்கள் (TOTAL) நிர்ணயம்
செய்யவில்லை என்பது உண்மை.
இவர்கள் 9 பேரும் ஒரே கட் ஆப் (197) மதிப்பெண்ணில் இருந்தாலும், உயிரியல் பாடத்தில் 199 மதிப்பெண் எடுத்த ASIMA PARVEEN, சமுதாய ரேங்க் 51 பெற்றார். உயிரியல் பாடத்தில் 198 மதிப்பெண் எடுத்த KALIL F, சமுதாய ரேங்க் 52 பெற்றார்.
NASREEN FATHIMA M என்ற மாணவியும், MOHAINUDHEEN SHARUK S என்ற மாணவரும் உயிரியல் பாடத்தில் 197, வேதியல் பாடத்தில் 198 என சரிசமமாக எடுத்திருந்தனர். இதனால் - நான்காவது பாடம், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட - கணிதத்தில் 200 எடுத்த NASREEN FATHIMA M சமுதாய ரேங்க் 53 பெற்றார். கணிதத்தில் 189 எடுத்த MOHAINUDHEEN SHARUK S சமுதாய ரேங்க் 54 பெற்றார்.
இவர்கள் 9 பேரில் (அதாவது, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பிருந்த தர வரிசைப் பட்டியலில் கடைசியாக இருந்த மாணவர்கள் 9 பேரில்) ஆகக் குறைந்த மொத்த மதிப்பெண் 1152. ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் 177, அதிகம் 192. மொழிப்பாடத்தில் குறைந்த மதிப்பெண் 186. அதிகம் 197.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross