Re:...கொட்டிக் கிடக்கும் கல்வி வாய்ப்பும் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பும் posted bymackie noohuthambi (kayalpatnam)[13 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32453
கல்வி - அது வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி செல்வ செழிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தானும் தன் குடும்பமும் பயன்பெற்று உற்றார் உறவினர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தங்கள் செல்வம் பயன்பட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி இந்த காயலநல மன்றத்தின் பணி.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மருத்துவம் பொறியியல் பட்டப் படிப்படிப்பை மட்டுமே அது ஊக்குவிக்க முயற்சி செய்கிறது.
காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் பல்வேறு சுமார் 200 துறைகளில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதையும் அந்த துறைகளில் வேலை வாய்ப்புக்கள் குவிந்து கிடப்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகிறது. புதிய தலைமுறை கல்வி இதழும் இப்படி ஒரு திறந்தவெளி கல்விகள், வேலை வாய்ப்புக்கள் பற்றி வாரம்தோறும் புது புது தகவல்களை தருகிறது.
ஒரு வாசல் அடைத்தால் அல்லாஹ் 9 வாசலை திறப்பான் என்ற செய்தி நம் இளைஞர்களுக்கு தப்பான ஒரு பார்வையை தந்துள்ளது. உண்மையில் 9 கதவுகளும் அடைக்கப் பட்டு பின்பு தட்டியபின் திறக்குமாறு அல்லாஹ் வைக்கவில்லை. அவை தாழ்பாள் போடாமல் சார்த்தி வைக்கப் பட்டுள்ளது. நாம் முயற்சி செய்து சற்று தள்ளிப் பார்த்தால் சட்டென திறந்து கொள்ளும்.
எனவே இளைஞர்கள் புது புது அர்த்தங்கள் - புது புது பார்வைகள் என்று தங்கள் எண்ண அலைகளை விரியவிட்டால் அங்கே மருத்துவம் பொறியியல் என்ற பொறிக்குள் சிக்கி தங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்க தேவை இல்லை.
மாற்றி யோசிப்பது அல்லது வித்தியாசமாக சிந்திப்பது இதற்கு ஆங்கிலத்தில் "LATERAL THINKING"என்று சொல்வார்கள்.
"வாழப் பொருள் வேண்டும் - வாழ்வதிலும் பொருள் வேண்டும்"
அரசு தேர்வுகள் நெருங்கிவரும் இந்த சூழலில் எல்லா மாணவர்களும் பலதுறைகளைப் பற்றி சிந்தித்து, தாங்கள் பெறும் மதிப்பெண்களுக்கு அமைய தங்கள் உயர் கல்வியை தொடர்ந்து, துரித வேலைவாய்ப்பு பெற்று வாழ வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross