செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல மனிதர், நன்றி உள்ளவர், உழைப்பாளி, சிறந்த சமூக சேவகர்..... posted byசொளுக்கு.M..A.C.முஹம்மது நூஹ் (சென்னை)[14 January 2014] IP: 113.*.*.* India | Comment Reference Number: 32506
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
அன்பு சகோதரருக்கு திடீர் உடல்நலக்குறை என்று கேள்விப்பட்டதுமே என் மனம் கணத்துப்போனது அதில் இருந்து இந்த நிமிடம் வரை நான் மீழவில்லை.
இவரைப்ப்ற்றி பலரும் பல விசயங்களை கூறிவிட்டீர்கள். நான் சொல்வதற்கு எதுவுமே இல்லையென்றாலும் என்னிடம் அவர் நடந்துகொண்ட விதத்தை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.
இன்றைய அவசர உலகத்தில் எதைப்பற்றியும், யாரை பற்றியும் கவலை படாமல் இருக்கும் பல மனிதர்களில் மத்தியில் இவர் ஒரு ரகம், இவரை சிலர் சில பலிவாங்கும் சம்பவங்களுக்கு பகடையாக பயன்படுத்தியது உண்மை என்று ஒரு கட்டத்தில் தெரிந்த பின்பு அதற்காக பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் நேரில் சென்று மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து இன்னொரு சம்பவத்தில் இவரா அப்படி செய்தார் என்று நான் சிலரிடம் நான் கேள்விபட்டதை சொன்னபோது அதனை கேள்விபட்ட முஹைதீன் அவர்கள் உடனே எனக்கு போன் செய்து மச்சான் நான் அப்படி செய்பவனா என்று உரிமையுடன் கேட்டு, மேலும் அதனை செய்யவில்லை என்பதனையும் நிருபித்துக் காட்டிய நல்ல மனிதர்.
இப்படி பட்ட நல்ல மனிதர் இறைவனின் நாட்டப்படி நம்மையெல்லாம் விட்டு மிக குறுகிய வயதில் பிரிந்து சென்று விட்டார். இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னதான் யார் ஆறுதல் கூறினாலும் அது ஈடாகாது.
அவர் தன்ன்னுடன் வேலை பார்க்கும் சகோதரருக்காக வீடு கட்டி கொடுக்க அவர் எப்படி உழைத்தார் என்று எனக்கு நன்றாக தெரியும். வல்ல அல்லாஹ் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தினையும் அமைத்து கொடுக்க வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross