மார்க்க வரம்புகள் அவசியமே! posted byS.K.Salih (Kayalpatnam)[17 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32552
எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதை நம் மார்க்க வரம்பிற்குள் நின்று செய்வது அவசியம் என்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை. எது வரம்பு என்று தீர்மானிப்பதில்தான் கருத்து வேறுபாடுகள் பிறக்கின்றன.
இது இவ்வாறிருக்க, உலமாக்கள் - முஃப்திகளின் அக்கால ஃபத்வாக்களை பொத்தாம்பொதுவாக விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அன்று அவர்கள் அனைவரும் இறையச்ச (தக்வா) மேலீட்டால் வழங்கிய ஃபத்வாக்கள் அவை. இன்று நமக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் பழகிய ஒன்றாகிப் போனதால் நாம் இலகுவாக அவர்களது ஃபத்வாக்களை விமர்சிக்கிறோம். ஆனால், அன்று ஃபத்வா கொடுத்தோர் - அதை விமர்சித்தோர் என இரு சாராருக்குமே அக்கண்டுபிடிப்புகள் குறித்து இன்றிருக்கும் விளக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, உளத்தூய்மையுடன் அவர்களின் அறிவுக்கு உட்பட்டு செயல்பட்டுள்ளனர் இரு சாராரும்.
புரிந்துகொள்வதற்காக தற்காலத்திற்கேற்ற எடுத்துக்காட்டு ஒன்று:-
இன்று உலகில் க்ளோனிங் குறித்தும், ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அல்லது இறந்துவிட்டால், அவரது கண், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் (உடல் தானம்) செய்வது குறித்தும் இக்கால மார்க்க அறிஞர்களிடம் கருத்து ஒற்றுமை இல்லை. நமக்கும் அதில் போதிய தெளிவில்லை. (சிலர், எனக்குத் தெளிவுள்ளது என்று வாதிடலாம். நான் பொதுவான மனப்பதிவைச் சொல்கிறேன்.)
ஆனால், இதே தெளிவற்ற நிலை இன்னும் பத்தாண்டுகளில் இருக்கப்போவதில்லை. அவ்வாறிருக்க - பிற்கால உலமாக்களும், பொதுமக்களும் இன்றைய கருத்து வேறுபாட்டை - அன்றைய உலமாக்களின் கருத்தை நாம் இன்று விமர்சித்துக் கொண்டிருப்பது போல விமர்சித்தால் அதில் வியப்பொன்றுமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross