அலசிப்பார்பார்களா அருமை முஸ்லிம் மாந்தர்கள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (yanbu)[26 January 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32741
கருத்து கணிப்பில் ப.ஜா.விற்கு 200 to 220 இடங்கள் என்றும் காங்ரஸ்க்கு 110 to 120 இடங்கள் என்றும் தனியாக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக எழுதுகிறார்கள்!
தமிழகத்தில் அதிமுகவிற்கு 20 இடங்கள் வரை என்றும் கூறுகிறது. ஒருவேளை இக்கருத்து கணிப்பு போல்நடந்தால். தமிழக கட்சிகளின் நாளைய நிலைப்பாடு என்னாவாக இருக்கும்.
கலைஞரை பொறுத்தவரை மதவாதகட்சிக்கும்,மதச்சார்புடைய கட்சிக்கும் தி.மு.க ஒருபோதும் ஆதரவு கொடுக்காது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்!
ஆனால் அம்மாவோ ஒரு நாள் கூட மதவாதசக்திகள், மதச்சார்புடைய சக்திகள் மதசார்பற்ற இந்நாட்டை ஆளக்கூடாது என்று ஒரு வார்த்தை கூட இதுவரை சொல்லவில்லை!
இதிலிருந்து என்ன தெரிகிறது நாம் 40 யும் வென்று மற்றைய மாநில கட்சியோடு சேர்ந்து 3-வது அணி அமைத்து அதற்க்கு தன்னை பிரதமராக்குவதற்குறிய அனைத்து
வியூகத்தையும் வகுத்து நான் பிரதமராகி விடுவேன் என்ற பகல் கனவில் பவணி வந்து கொண்டிருக்கிறார் புரட்சி தலைவி அவர்கள்!
ஒருவேளை இந்த கனவு பொய்த்துவிட்டால் ,எனக்கு துணைபிரதமர் பதவியாவது தாருங்கள் என்று பா.ஜா காவிடம் தஞ்சம் அடைய தயங்க மாட்டார் தமிழக முதலவர்!
தான் ஆளும் மாநிலத்திலேயே மருத்துவ மனையில் இடஒதிக்கீடு இல்லை என்று அறிவித்த அம்மா அவர்கள் கலைஞர் முஸ்லிம்களுக்கு தந்த 3 1/2% சதவீத
இடஒதிகீட்டையும் தாண்டி மேலும் அதிகமாகவா தரப்போகிறார்? ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதிக்கீடு அறிவித்த அரசாங்கத்தையே வன்மையாக கண்டித்த மென்மையான குணமுள்ள தலைவி அல்லவா?
"அ.தி.மு.க.வை பொறுத்தவரை - பல்வேறு கூட்டணிகளாக எதிர்கட்சிகள் இருப்பதையே விரும்புவது போல் தெரிகிறது. அதனால் வாக்குகள் சிதறுவதால், அ.தி.மு.க.விற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டில் அது உள்ளது".(C&P)
அட்மின் அவர்கள் கணித்ததுதான் முற்றிலும் உண்மை. நாம்
வெவ்வேறாக பிரிந்து நின்றால் அம்மாவிற்குத்தான் அடித்தது யோகமாகிவிடும்!
ஆகவே அன்புக்குறிய முஸ்லிம்மாந்தர்களே, அனைத்து முஸ்லிம் அமைப்புகளே, அனைத்து முஸ்லிம் கட்சிகளே
நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒட்டுமொத்தமாக ஒரு கட்சியுன் சேர்ந்து இந்த தேர்தலை சந்திப்போம், இன்ஷா அல்லாஹ் நாம் அதிக இடங்களை வெல்வது மட்டுமல்ல நமுடைய வலிமையை இவ்வையகம் உணர்ந்துகொள்ளும் சரித்திரத்திற்கு சொந்தக்காரராகிவிடலாம்
நேர்மையான நடுநிலை நெஞ்சத்தோடு அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக அலசி பார்ப்பார்களா அனைத்து முஸ்லிம் சகோதரர்களும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross