செய்தி: சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும், மதவாதத்தை எதிர்க்கும் கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம்: கருணாநிதி அழைப்பு! நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[17 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33204
அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த மாநாடு மிக சிறப்பான மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய மாநாடுதான் அதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
அதுதான் தி . மு . க வின் கட்டமைப்புடன் கூடிய ஒருங்கினைப்பு எது மற்ற எந்த கட்சிகளிடமும் காண முடியாது இது இவர்களின் தனித்தன்மை .
ஆனால் கருணாநிதியுடைய உரை ஒரு சுரத்து இல்லாத உரை என்றால் அது மிகவும் உண்மை .
அவரது உரை மூலம் நமக்கு அறிய வருவது யாது என்றால் அவர் காங்கிரசையும் , விஜய காந்தையும் அழைத்து இந்த கூட்டனிக்கு கொண்டு வருவதற்கு உள்ள வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார் என்பதை குழந்தையும் அறியும் .
நம் மக்களுக்கு மஞ்சள் துண்டை ஆதரிக்கும் நிலை வந்து விடுகிறது தமிழகத்தில் நம் மக்கள் இந்த கட்சிக்கு செய்த பங்களிப்புகள் அளக்க முடியாத ஒன்று .
ஆனால் நம் சமுதாயம் அந்த அளவுக்கு இந்த கட்சி மூலம் பயன் அடையவில்லை என்பதுதான் உண்மை .
எது எப்படி இருந்தாளும் இந்த தி . மு .க தான் சற்று நம் சமுதாயத்துக்கும் , ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சில , பல சமையங்களில் ஆதரவாக இருந்துள்ளது என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான் .
கருணாநிதி மட்டும் தன் குடும்ப ( ஸ்டாலினை தவிர ) அரசியலை கைவிட்டு கட்சியை நெறிபடுதினால் இந்த
தி . மு .க இன்று ஒரு நல்ல நிலையாக வலுவாக இருந்து இருக்கும் இதட்கு காரணம் கட்சி தன் கொள்கைகளை இடைப்பட்ட காலத்தில் மறந்ததுதான் .
சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும், மதவாதத்தை எதிர்க்கும் கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம் என்ற சொல் தன் சொந்த கட்சி நலன் என்றாலும் நமக்கு இந்த சூழ்நிலைக்கு வேண்டிய ஒன்றாக உள்ளது .
நம் மக்கள் இந்த அரசியல் மூலம் என்ன என்ன பயன்களை அடைய முடியும் என்பதை அதனை அடைய வேண்டிய வழியை நாம்தான் அமைத்து கொள்ள வேண்டும் அது எந்த சூழ்நிலைக்கும் நமக்கு உதவும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross