வருவார்கள் வெற்றி பெறுவார்கள்... இனி நாம் மறப்போம் பிறகு போராடுவோம் இது நமக்கு தேவையா... ஒரே வழி தேர்தல் புறக்களிப்பு மட்டுமே..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[18 February 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33218
வந்தார்கள் ஓட்டு கேட்டார்கள் வெற்றி பெற்றார்கள்...! MP பதவி சுகம் அனுபவித்தார்கள் 5 ஆண்டு முடிய போகிறது மறு தேர்தலும் வருகிறது இனி அடுத்து வேட்பாளர் பெயர் மாறவும் போகிறது நமது ஊருக்கும் வருவார்கள் காயலின் மக்கள் செம்மறி ஆட்டு கூட்டம்போல் அவர் பின்னாடி அவரின் கட்சிக்காக நகரில் ஓட்டுக்காக பிரச்சாரமும் செய்வார்கள்..
இது காயலில் வழமையான செம்மறி ஆட்டு கூட்டம் என்றே நானும் உரக்க சொல்வேன்..! மேலும் இதையே அந்த அரசியல் கட்சியின் வட்டமும் - சதுரமும் மாவட்டமும் - மாநில தலைமையும் நமது காயலை அது ஒரு செம்மறி ஆட்டு கூட்டமே தான் என நினைத்தும் வைத்துள்ளார்கள்..!
நாமும் அவர்களின் அந்த நினைப்பை மாற்ற நமது மக்கள் ஒரு நிமிடம் நினைத்தால் மட்டும் போதுமானது..
ஊரை ஒருகிணைத்து போராட்டம் அறிவிக்கும் தலைமையை நான் கேட்கிறேன் ஓட்டு கேட்க வரும் வேட்பாளரிடம் நகரில் கிடப்பிலுள்ள நடைமேடையை நான் வெற்றி பெற்றால் அனைத்தையும் செய்து தருகிறேன் என உறுதி மொழி எழுதி கேட்போமா..? போராட்டத்தை அறிவித்து இருக்கும் தலைமை இதற்க்கு முன் வருவீர்களா..? வர மாட்டீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்..! மேடையில் பேசிக்கொள்ள மட்டும் தான் ஊர் முக்கியம் என்பீர்கள்.. அணைத்து ஜமாஅதுக்களையும் கொள்கை பாராமல் கலந்து பேசி உங்களால் இதை அறிவிக்க முடியுமா...? உறுதி மொழி எழுதி தந்தாள் மட்டுமே ஓட்டுபோடுவோம் இல்லையெனில் எங்கள் ஓட்டை புறக்களிப்போம் அதாவது தேர்தலை புறக்களிப்போம் என பொது கூட்டம் போட்டு அறிவிப்பு செய்ய முடியுமா...?
5 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வருகிறது கூடுகிறோம் பேசுகிறோம் கலைகிறோம் இது தானே நமக்குள் வழமையாக உள்ளது..! நமது அடிப்படை உரிமை - தேவை நம்மிடத்திலிருந்து பறிக்கப்படும் போது நாம் ஏன் வருகிற தேர்தலை புறக்களிக்க கூடாது என வருத்ததோடு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...
வேற்றுமைகளை களையுங்கள் - சிந்தியுங்கள் மக்களை ஒருங்கிணையுங்கள் - நகர் நலனுக்காக மட்டுமே என உண்மையிலேயே செயல்படுங்கள் கண்டிப்பாக இதற்க்கு வழி பிறக்கும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross