தெளிவான விளக்கம் & கேள்விகள். posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[18 February 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33217
உனக்கும் பெப்பே, உங்க அப்பனுக்கும் பெப்பே!. நல்லாத்தான் நாடகம் ஆடுறாங்க.
இப்போதைய குளறுபடிகளுக்கு என்ன காரணங்கள் என்று தெளிவான விளக்கம் தந்த இந்த இணையதளத்துக்கு நன்றி!
‘தற்போதைய சூழ்நிலையில் இரயில்வே துறையிலிருந்து நிதி ஒதிக்கீடு செய்ய இயலாது எனவும், ஏனைய கோரிக்கைகளை தவிர்த்து, நடை மேடையை உயர்த்தி, விரிவாக்கம் செய்ய மட்டும், சுமார் ரூபாய் 15 இலட்சத்தில் மதிப்பீடு செய்து தருவதாகவும், அதற்குரிய பணத்தை நண்கொடையாக நாமே வழங்க வேண்டுமெனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் அறிகிறோம்.
ஏற்கனவே டெண்டர் விட்டதெல்லாம் என்னவாம்?. நிதி இல்லாமலா டெண்டர் விட்டார்கள்? ஏற்கனவே இந்த பணிகளுக்காக ஒதுக்கிய நிதி எங்கே போனது?
கொஞ்சம் விட்டால் நீங்களே நன்கொடை அளித்து, புதிய ரயிலும் விட்டுருங்களேன் என்று சொன்னாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. இவர்களுக்கு காயலர்கள் என்றால் நக்கலாகத்தான் இருக்கிறது.
அடுத்தது, நமது தொகுதியின் கழக MP. இவர் 1 மாதத்திற்கு முன்பு, நாம் வைத்திருக்கும் கோரிக்கை விஷயமாக, அதை நிறைவேற்றக் கோரி ரயில்வே அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விட்டார்.
இப்போது என்னவென்றால், ‘நாடளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதி, தன்னிடத்தில் இருப்பு இல்லை எனவும், எனவே ராஜ்ய சபை உறுப்பினரிடத்தில் முயற்சியுங்கள்’ என்று ஆலோசனை வழங்கி உள்ளார்.
ஓட்டு கேட்க மட்டும் தெரியும். தேர்தல் நேரத்தில், காயல்பட்டினம், கலைஞர்பட்டினம்(?) உங்கள் ஓட்டை “சிந்தாமல் சிதறாமல்” தி.மு.க உக்கு அளியுங்க என்று சொல்ல தெரியும்.
இப்போ என்னடா என்றால், ராஜ்ய சபை உறுப்பினரிடத்தில் முயற்சியுங்கள்’ என்கிறார். ராஜ்ய சபை உறுப்பினரிடம் கேட்க, இவர் என்ன சொல்வது? எங்களுக்கு தெரியாதா?
ஏற்கனவே, இந்த தொகுதியில் தி.மு.க வின் நிலைமை பரிதாபம். இந்த மாதிரி செய்தால், “டெபாசிட்” கூட தேறாது. இந்த லட்சணத்தில், நமதூர் கழக அனுதாபிகள், தி.மு.க ஆட்சியில்தான் நமதூருக்கு நலத்திட்டங்கள் கிடைத்தனவாம்.
ஒரு சாதாரண, ரயில் நடைமேடை (platform) உயர்த்துதல் மற்றும் அதை சார்ந்த பணிகளுக்கு, இந்த தி.மு.க MP யால் முடியவில்லை. வேற என்னத்தை செய்ய போகிறார்?.
கடந்த 3 நாடாளுமன்ற தேர்தலில், இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க உறுப்பினர்களால் (திரு.ஜெயசீலன், திருமதி.ராதிகா செல்வி மற்றும் திரு.ஜெயதுரை) நமதூருக்கு செய்த சாதனைகள் என்ன? என்று இவர்களால் ஒரு நல திட்டத்தையாவது சொல்ல முடியுமா?
திரு.ஜெயசீலன் அவர்களின் சொந்த ஊரான நாசரேத் ரயில் நிலையத்தை பாருங்கள். எவ்வளவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று கவனியுங்கள்.
நமதூருக்கு தி.மு.க சட்டமன்ற /நாடாளுமன்ற பிரதிநிதிகளால் (அனிதா அண்ணாச்சி விதிவிலக்கு) ஒரு பயனும் இல்லை என்பதே சரி.
நமதூரின் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு கேள்வி. இந்த பிரச்சனை பற்றி முஸ்லிம் லீக் மட்டும்தான் இதற்காக முயற்சி எடுக்க வேண்டுமா? மற்றவர்களுக்கு இதில் அக்கறை இல்லையா? முஸ்லிம் லீக் சார்பாக இவ்வளவு முயற்சி எடுத்த பின்பும், இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இது விஷயமாக எடுத்த முயற்சிதான் என்ன?
மக்களே சிந்திப்பீர்! வரும் தேர்தலில் செயல்படுவீர்!
ஏற்கனவே அறிவித்த படி, மறியல் போராட்டம் நடைபெற வேண்டும். நமது ஒற்றுமை மற்றும் உறுதியை அதிகாரவர்கத்திற்கு நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த போராட்டத்தை வெற்றியாக்கி, எந்த நோக்கத்திற்காக போரடப்படுகிறதோ, அதை அடைய உதவி புரிவானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross