செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[19 February 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33254
ஒற்றுமை ஓங்குக. போராட்டம் வெல்க.சண்டித்தனம் பிடிக்கும் அதிகாரி வர்க்கம், ஏமாற்றி கொண்டிருக்கும் அதிகார வர்க்கம், இவ்விருவருக்கும் நாம் பாடம் புகட்ட வேண்டிய நாள் நமது ரயில் மறியல் போராட்டம்.அதற்கும் மசிய வில்லை என்றால் நமது ஆயுதம் நாடாளுமன்ற தேர்தல். ஒட்டு மொத்தமாக புறக்கணிப்போம்.
அந்நேரத்தில் அரசியல் வாதிகள் தேர்தல் முடியட்டும் வானை வில்லாக வளைப்போம், மணலை கயிறாக திரிப்போம் என்ற ஆசை வார்த்தைகள் கூறுவார்கள். தேர்தல் முடிந்த வுடன் தேடித்தான் அலைய வேண்டும் அவர்களை, அதற்கு இடம் கொடுத்துவிட வேண்டாம். நாங்கள் வெளி நாட்டில் இருந்தாலும் எங்கள் உள்ளம் எல்லாம் போராட்ட களத்தையே சுற்றி வருகிறது . எங்களால் முடிந்தது மெயில் மற்றும் SMS அனுப்பி விட்டோம். ஆயிரம் கட்சியில் இருந்தாலும்நமதூர் என்று வரும் போது ஊர் தான் நமக்கு அவசியம். கட்சிகள் எல்லாம் அப்புறம் தான்.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை (காயல் ) தோற்கின் எப்படி வெல்லும். இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross