வெளியில் நடைபெறும் போட்டி posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[17 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3326
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்புச் சகோதரர் அஹ்மது சுலைமான் அவர்கள், எனது கருத்துக்கு எழுதிய மறுமொழி மிகவும் நன்று. என்னை பற்றி கணித்து இருப்பது மிகவும் சரியே.
மார்க்க வரைமுறைகளையும் , கலாச்சாரத்தையும் பேணி நம் பெண் மக்களை காக்க வேண்டும் என்பதே எனது அவா.
மாஷா அல்லாஹ்! தங்களின் மறுமொழியில் " மார்க்க வரைமுறைகளுக்கு சிறு பாதிப்பு என்றால் கூட அந்நடவடிக்கைகளிலிருந்து எங்கள் பெண் மக்களைக் காத்துக்கொள்ள நாங்கள் என்றும் தயார்! " என்று மிகவும் பொறுப்போடு, மார்க்க உணர்வோடு உள்ள நல்ல பதிலை தந்திருக்கிறீர்கள்.
உங்களை மாதிரி உள்ள பெற்றோர்கள் இருக்கும் வரை நம் சமுதாய மக்களுக்கு எந்த கவலையுமில்லை, அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------
மக்களே!
சம்பந்தப்பட்ட அப்பள்ளியில் ஆண்கள் நேரடியாக வந்து யாருக்கும் யோகா பயிற்றுவிப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் நாம் அறிந்தவரை வேறு பள்ளியில் ஆண் / பெண் இருவரும் யோகா பயிற்சியளிக்கிறார்கள் என்பதால்
அங்கே படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பரிசீலித்து செயல்பட வேண்டியது.
மேலும் போட்டிகள் என்று வரும்போது அதுவும் வேறு ஊர்களில் மாநில அளவிலான போட்டிகள் என்று நடை பெறும்போது மிகுதமாக பல (அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், டிரஸ்டிகள், பார்வையாளர்கள் என்று) ஆண்கள் வரக்கூடும்.
அதிலே பரிசுபெற்ற குறிப்பிட்ட சிலரை அவர்களுக்கு முன்னிலையில் யோகா செய்ய சொல்லும்போது அதிலே நம்முடைய பிள்ளைகள் இருந்தாலும் அங்கே செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படத்தான் செய்யும்.
எனவே வெளியில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.
----------------------------------------------
இன்றைய நவ நாகரிகமும், கலாச்சார சீர் குலைவும் நம்மையும் , நம் சந்ததியினரையும் தொற்றிவிடக்கூடாதே என்ற கவலைதான் என்னை ஆட்கொண்டிருக்கிறது அதன் வெளிப்பாடே இந்த தகவல்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் தீங்குகளிலிருந்து காப்பாற்றி நேரான வழியில் நடக்க கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross