அவரவர் உரிமை. posted bykavimagan (dubai)[17 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3325
அன்புச் சகோதரர்களே!
எனது எந்தக் கருத்துப் பதிவிலும்,ஜெயாவை ஆதரியுங்கள் என்று நான் எழுதியதே இல்லை. ஆனால் எதையுமே அரை குறையாக புரிந்து
கொள்ளும் சிலர்,எங்களைப் போன்றவர்களை ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் என்பதைப்போல சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள்.
நமது சமூகத்தின் வாக்கு வங்கியை மொத்தமாக அனுபவித்துவிட்டு,சில ரொட்டித்துண்டு சலுகைகளை வீசிஎறிந்து,வெறும் வார்த்தை
ஜாலங்களால் நம்மை வளைத்து வைத்திருக்கின்ற கருணாநிதியின் பிடியிலிருந்தும்,மயக்கத்திலிருந்தும் வெளியே வந்து சிந்தியுங்கள்
என்ற கருத்தை மாத்திரம்தான் நான் இதுவரை அழுத்தமாகப் பதிவு செய்து வந்திருக்கின்றேன்.இதே கருணாநிதியின் மயக்கத்தில்,
பலமுறை இவர்களுக்காக சிறை சென்றதும்,துறைமுகம் பகுதி மாணவர் அணிச்செயலாளர் ஆகப் பொறுப்பில் இருந்த போது,அன்றைய
அ.தி.மு.க.ஆட்சியில் காவல்துறையின் அராஜகங்களை நேர்கொண்டதும் இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் பின்னர் TIMES OF INDIA தேசிய
நாளிதற்காக பணியாற்றிய போது,நமது சமூகம் கருணாவைப் போல
அதிகாரவர்க்கத்தினால் எவ்வாறெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்தேன்.தெளிந்தேன்.உங்களிடமும் அதைத்தான் சொல்கிறேன்.சில நாட்களுக்கு முன்னர்,நான் இதே வலைதளத்தில் பதிவு செய்த கருத்தினை மீண்டும் ஒருமுறை தருகிறேன்.தலைவனும்,தலைவியும் வாழ்ந்தது போதும்.இனியேனும்,நாமும்,நமது தலைமுறையும் வாழ வேண்டும்.
துரோகிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதே எனது கருத்து.யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross