செய்தி: நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு! ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!! (பிரசுரம் இணைக்கப்பட்டது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒருங்கிணைத்த ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றிச்செய்தி!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[21 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33281
அல்ஹம்திலில்லாஹ்! நமதூர் மக்களின் ஒட்டு மொத்த ஒருமித்த ,ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றிச்செய்தி..
வல்லஅல்லாஹ் நம்முடைய ஒட்டுமொத்த ஒற்றுமையை தொடர்வண்டி விஷியத்தில் தொடர்பாக்கி சோதித்து இருக்கிறான் என்றே எண்ணுகிறேன்! அவன் நாட்டப்படியே நாம் அனைவர்கள் உணர்வும் ஒட்டுமொத்த ஒற்றுமையில் ஒருங்கிணைந்ததால் அந்த ஓரிறைவன் நமக்கு வெற்றியின் வெளிச்சத்தை உதையமாக்க ஆரம்பித்துள்ளான்!
இதுவரை கிடைத்த வெற்றிக்கி வித்தூன்றிய மேன்மைமிகு முன்னணியர்கள் முதல் அன்புடனும் ஆர்வமுடனும் அணிசேர்ந்து போராட்டகளத்தில் குதிக்க காத்திருந்த கடைசி காயல் கண்மணிகள்வரையுள்ள உங்கள் அனைவர்களுக்கும் என்னுடைய மற்றும் நான் வசிக்கும் சவூதி "யான்போ"வாழ் காயல் சகோதரர்கள் அனைவர்களின் சார்பாக அன்பொழுகும் நன்றியினை உங்கள் நளிர் கரங்களில் காணிக்கியாக்குகிறோம்!
இதே ஒற்றுமையும்,உணர்வும் ஒருமித்த கூடலும் வருங்க்காலத்தில் நமதூருக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ,அப்போதெல்லாம் அணிதிரள தயாராக இருக்கிறோம் என்பதற்குறிய கடந்தகால பலசான்றுகளில் இந்த வெற்றியும் ஒரு சான்றாகும்!
இதே ஒற்றுமையுணர்வோடு உண்ணிப்பாக கவனிக்கவேண்டிய அடுத்து மிக முக்கியமானது,,நச்சு ஆலையின்
நடவடிக்கையையும் அங்கிருந்து வெளியாகும் கழிவுகளின் தீங்கை அறிந்து அதை அடியோடு களைந்தெறியும் முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!
அந்த ஆலையிலிருந்து வெளியாகும் கழிவுகளில் நச்சுத்தன்மை இருக்கிறது என்ற நம்முடைய பலமான ஆதாரத்திற்கு அந்த ஆலையிலிருந்து இதுவரை ஆணித்தரமான பதில்இல்லை, மாறாக அக்கொடிய கழிவுக்கிருமியினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் பட்டியல்தான் நீண்டுகொண்டே போகிறது.இந்த செய்தியை எழுதும் இந்தவேளயிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சகோதரி மரணித்துள்ளார்.(இன்னலில்லாஹி.....)
ஆகவே அன்பு நெஞ்சங்களே இந்த ஆலை விஷியத்தில், அதற்காக ஏற்படுத்தி இருக்கும் "KEPA"அமைப்புக்கு நாம் ஒற்றுமையுடனும் ,ஒருசேரத்துடிக்கும் அதே உணர்வுடனும் அனைத்து ஒத்துழைப்பையும் அவர்களுக்கு அளிக்க வேண்டுமாய் உங்கள் அன்பு சகோதரர்களில் ஒருவனான
ஆதம்சுல்தான் அகம் உருக வேண்டிக்கொள்கிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross