Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[09 March 2014] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33632
உணவு தண்ணீர் இல்லாமல் இன்றோ நாளையோ சாகக்கிடக்கும் ஒருவனை, வருவோரும் போவோரும் பார்த்தும் பாராமுகமாக சென்று கொண்டிருக்கும்பொழுது ஒருவன் மட்டும் அவனுக்கு பழஞ்சோறும், நீரும் கொடுத்து அவனை சாவிலிருந்து காப்பாற்றி உதவி செய்கிறான்.அந்த ஒருவனால் உயிர் பிழைத்து உதவி செய்தவனை உயிர் உள்ளவரை மறக்காதிருப்பது தான் நன்றிக்கடனாகும்!
அப்படி உயிர் பிழைத்து உட்ககாரவைத்தவனிடம் போய்,உனக்கு அவன் பழஞ்சோறுதானே தந்தான், நான் பிரியாணி தருகிறேன்,
நீ வலிமையுள்ளவனாகளாம் , இதோபார் இந்த ஹோட்டலில் இருந்துதான் பிரியாணி வரும், ஆர்டரை கூட நன்றாக
பார்த்துக்கொள் என்று சொல்லி, என்னமோ பழஞ்சோறு
தந்தானாமே உன்னை ஏமாற்றி உன்னிடமுள்ள உரிமையை பிடுங்க அவன் போடும் தந்திரம், ஏமார்ந்து விடாதே,அவனை உதறித் தள்ளிவிட்டு என்னிடம் வா, என்ற மோகன சூழ்ச்சி வார்த்தைகளால் வலை விரிக்கும் ஒரு தலைவி.
அப்படி ஆசைகாட்டி மோசம் செய்யத்துடிக்கும் ஒரு தலைவியின் பக்கம் அத்தலைவியின் மதிமயங்கும் வார்த்தையை நம்பி (தனக்கு உயிர் கொடுத்து உட்க்காரவைத்து உதவி செய்தவன் என்ற நன்றி உணர்வைகூட கிஞ்சித்தும் நினையாமல் அவன் நெஞ்சினிலேயே குத்திவிட்டு) நிலைமாறிப்பறந்து வந்துவிடு என்று வலை வீசி பிடிக்கும் முயற்சியில் சிலபச்சோந்திகள் திட்டமிட்டு வட்டமடித்துகொண்டு இருக்கிறார்கள்!
அப்பச்சோந்திகள் மார்க்கம் ஹதீஸ் என்ற பாசாங்க போதனையில் உங்களை போர்த்தி தூக்க தயாராக இருக்கிறார்கள். எனதருமை முஸ்லிம் சமுதாயமே ,
ஏமார்ந்து விட வேண்டாம்.
உண்மையின் பக்கமும், ஒற்றுமையின் பக்கமும் , நம்மினத்தை ஒழிக்க நினைக்கும் கூட்டத்தை கூண்டோடு ஒழிக்க உறுதி பூண்டுள்ளவர்களின் பக்கமும் நாம் இணைந்து என்றும் நன்றியுள்ள மனசாட்சியுள்ள முஸ்லிம்களாக வாழ்வோம், அததூய வழிக்கு
உறுதுணையாகவும் இருப்போம் இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross