மறுபடியும், மறுபடியும் முஸ்லிகளின் காதில் பூ சுற்ற முயல்கிறார் முதல்வர். posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[09 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33642
மறுபடியும், மறுபடியும் முஸ்லிகளின் காதில் பூ சுற்ற முயல்கிறார் முதல்வர் அவர்கள்! முஸ்லிம்கலென்ன ஏமார்ந்த சோனகிரியா? அல்லது ஒரு சில ==== இருக்கிறார்களே,அவர்களைப்போல் ஆமாம் சாமி போடும் ஆட்டு மாட்டு மந்தைகளா?
2001லிருந்து 2006 வரை அ.தி மு க் தமிழகத்தை ஆண்டது ,
அந்த வருடத்திலிருந்தே பிற்படுத்தபட்டோர் ஆணையம் இயங்கி வருகிறது. அதன் ஆயுள் காலம் ஒரு வருடம் ஆகும். அந்த ஒரு வருடம் முடியும் தருவாயில் அப்பொழுது ஆண்டுவரும் அரசு அதை புதிப்பித்துக்கொண்டே இருக்கும்.இது தான் நடந்து வந்த உண்மை.
அம்மையாரின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டுமென்ற உண்மையான எண்ணமிருந்திருந்தாள் அவர் ஆண்ட 2001 லிருந்து 2006 வரைக்குள்ள அந்த ஐநது ஆண்டுக்குள்ளாகவே கொடுத்திருக்கலாமே? மாறாக என்ன செய்தார் தெரியுமா?
பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையகாலமும் முடியப்போகும் கடைசி நாளில் அதைப் புதுப்பித்து விட்டு. ஆ...பார்த்தீர்களா பிற்படுத்தப்பட்டோர்
ஆணையத்தை புதுப்பித்து விட்டேன், முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு இனி பொத்துக்கொண்டு விழும் என்று கூறினார்.
அம்மாவின் வாக்கு அருள் வாக்கு என்று இன்று அவருக்கு கொடிபிடித்து கெண்டி தூக்கும் சில இஸ்ல்லாமிய தலைவர்களும் அன்று ஆமாம் அம்மா இடஒதிகீட்டை தந்திடுவார்,ஆகையால் நாம் நம் உயிரைக்கூடஉச்சமாக நினைக்காமல் இக்கணம் முதல் இரட்டை இலைதான் நம் மூச்சு, பேச்சாக இருக்கவேண்டுமென பேயாக பறந்து , பறந்து பிரச்சாரம் செய்தார்கள்.(ஆனால் இறுதியில் அல்லாஹ் அழகான முடிவை கொடுத்தான் அது வேறு விசியம்.)
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆந்திர அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீதம்
இடஒதிக்கீட்டை கொடுத்தது அதை அன்று வன்மையையாக கண்டித்த அதே ஜெயலலிதாதான், தன்னுடைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீட்டுக்கு அடித்தளம் அமைத்தாராம். கேப்பையில் நெய் வடிகிறது கேணையர்களே கொஞ்சம் அள்ளிக்கொண்டு போங்கள் என்பது போல் இருக்கிறதல்லவா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross