Re:...உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.. posted bymackie noohuthambi (chennai)[09 March 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33641
புரட்சி தலைவி அவர்களின் சுறுப்பும் முடிவெடுக்கும் ஆற்றலும் பாராட்டுக்கு உரியது. அதே நேரம் தோழமைக் கட்சிகளை மதிக்காமல் அவர் செயல்படுவது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையும் ஒரு அசாத்திய துணிச்சலையும் மமதையும் காட்டுகிறது. SLOW AND STEADY WINS THE RACE என்று சொல்வார்கள்.
"பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா! பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா!! அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை..என்று அவரது அரசியல் ஆசான் அவருக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
துணிவு இருக்கிறது பணிவு இல்லை. பாதை தெரிகிறது.பண்பு தெரியவில்லை. அறிவு இருக்கிறது அன்பு இல்லை.அவர் சொன்ன அறிவுரைப்படி இவர் நடந்திருந்தால், இன்று கனவு காணும் இந்திய பிரதமர் சிம்மாசனம் அவருக்கு கிட்டியிருக்கும் .
ஆனால் 110 விதியிலேயே ஆட்சி செய்து பழக்கப் பட்டு விட்டவர் திருவள்ளுவரின் 110 வது குறளின்படி நன்றி கொன்றவர் என்ற அவப் பெயரையும் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டிருப்பதை காண பரிதாபமாக இருக்கிறது.
காங்கிரசையும் திமுகவையும் மத்தியில் அரியணை ஏற விடாமல் தடுக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டிக் கொள்பவர், மதவாத - முஸ்லிம்களின் எதிரிகளாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியையும் அந்த சிம்மாசனத்தில் அமர விடக் கூடாது என்றும் மக்களிடம் அவர் கோரி இருந்தால், பாரதி கண்ட ஒரு புதுமை பெண்ணாக - நவீன சமூக நீதி தலைவியாக நாம் அவரை அடையாளம் கண்டிருப்போம்.
ஒவ்வொரு நாளும் நடக்கின்ற அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒரு நாள் அம்மாவும் மறுநாள் கலைஞரும் மாறி மாறி புள்ளிகளை பெறுகிறார்கள். இறுதி வெற்றி யாருக்கு என்ற பரபரப்பில் நம்மை வியப்பில் ஆழ்த்தி ஒரு தமிழனை வெற்றி கொண்டு சாதாரண 22 வயது நிரம்பிய, நமக்கு அறிமுகமில்லாத கார்ல்சன் என்பவர் புரட்சி தலைவியின் பொற்கரங்களில் இருந்து 10 கோடி ரூபாயை தட்டிப் பறித்து சென்ற கதை சொல்லும் செய்தி என்ன...
"உருவு கண்டு எள்ளாமை வேண்டும். உருள் பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" என்று வள்ளுவன் அடிக்கும் எச்சரிக்கை மணி...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross