செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்! காயலர்களும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் பொன்னான வாக்கு வீணாக கூடாது!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[25 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33926
எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்!அதில் எந்த எதிர்மறை எண்ணமும் இல்லை. எந்த கட்சியும் நம் இஸ்ல்லாமிய சமுதாயத்திற்கு இன்னல் விளைவிக்காமல் இல்லை, என்ன அதில் அளவுகளின் விகிதம் தான் சற்று கூடக்குறைய இருக்கும்!
தற்போது நம் கண் முன்னே இருக்கும் பெரிய ஆபத்து, சுனாமிபோல் நம் சமுதாயத்தை அழித்தொழிக்கத் துடிக்கும் ஒரு சக்திபோல் ஒரு பெரிய பிரளயம் நம்மை பயமுறுத்த தொடங்கி விட்டது!அது சுனாமி அலையா அல்லது சூம்பிபோன அசுத்த அலையா என்பதை வல்ல இறைவன் நமக்கு விரைவில் வெளிச்சம் காட்ட உள்ளான்!
இக்கட்டான சூழ்நிலையில் நிற்கும் நாம்,தற்போது எடுக்க வேண்டிய முடிவுதான் நம்மை அச்சுறுத்தும் இந்த அபாய நிலையிலிருந்து பாதுகாக்கப்படும் ஒரே வழியாகும்!இதில் இறந்த காலத்தில் என்ன நடந்தது ,எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங்கி அளவுக்கு மீறி ஆலோசனை செய்து,இதுதான் புனிதமான முடிவு என்று முன்,பின் பாராமல் துணிச்சலான நிலையென்று ஒரு
நிலைக்கு நம்மை நாமே ஆட்படுத்திக்கொள்ள வேண்டாம்!
சில விசியங்களை நாமும் தந்திரமகத்தான் கையாள வேண்டுமென நம் புனித நபியின் புண்ணிய வழிகாட்டி நம்மை வழி நடத்திச் செல்கிறது!
தற்போது வலிமையாக களத்தில் நிற்க்கும் அரசியல் கட்சிகளில் நமக்கு குறைவான துன்பத்தையும், துரோகத்தையும் தந்த கட்சி எது? நமக்கு உண்மையாகவே உதவியும்,ஒத்தாசையும் செய்ததின் அளவு விகிதம் எந்த கட்சியில் அதிகமாக இருக்கிறது? நம் வாழ்வாதார உரிமையின் வழிகாட்டியான இடஒதிக்கீற்றிக்கு உண்மையிலேயே உதவிய கட்சி எது?நம்முடைய பெரும்பாலான இஸ்லாமிய இயக்கமும், அமைப்புகளும் ஒற்றுமையுடன் இக்காலத்தின் கட்டாயம் கருதி ஓரணியில் ஒருங்கிணைந்து ஆதரவு கொடுக்கும்அணி எது? என்று அலசி ஆராய்ந்து அந்த அணிக்கு நம்முடைய ஆதரவை அளிப்பதுதான் தற்போது நமக்குறிய பாதுகாப்பாகும்!
இது தவிர்த்து நாம் மாற்றமாக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் உண்மையிலேயே நம்மினத்திற்கெதிராக விழும் வாக்காகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இலை!
இந்த ஆதம் சுல்தானாகிய நான் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஐந்து வயதிலிருந்தே ஆதரவுடையவனும்,அங்கதினர் என்ற அந்தஸ்தும் பெற்றவனாவேன்!ஆனால் அல்லாஹ் அறிய அந்த குறிப்பிட்ட கட்சிக்குள் எல்லோரையும் கவிழ்த்து விடவேண்டும் என்ற எந்த "ஒருதலை" முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதை உள்ளசுத்தியுன் கூறுகிறேன்! இப்போது என் கண்முன் நிற்பதெல்லாம்,நம்மின மக்களுக்குபாதுகாப்பான, வெற்றியடையக்கூடிய ஒரு அணியில் அடைக்கலாமாகிவிட வேண்டும் என்ற ஒரு பாதுகாப்பு எண்ண உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது!
ஆம் ஆத்மி கட்சி: மிகவும் உண்மையானதும் ஊழலற்றதும் மக்களுக்கு நன்மை செய்ய துடிக்கும் பல மனசாட்சியுடையவர்கள் அடங்கிய கட்சி என்று பிரபலபடுதப்படுகிறது!அது எந்த அளவிற்கு உண்மை என்ற ஆராய்சிக்கு போக விரும்ப வில்லை, ஆனால் ஒரு எதார்த்தம் என்னவென்றால் இதுவரை அக்கட்சி எந்த ஆட்சியையும் மேற்சொன்ன நற்க்குணங்களுடன் ஆண்டு அனுபவிக்க வில்லை!
அடுத்து, நம் சிறுபான்மை சமுதாயமாகிய இஸ்லாமிய சமுதாயதிற்க்குறிய அதன் கொள்கை குறிக்கோள் எனன? அது தெள்ளத்தெளிவாக கூறப்பட வில்லை.நம்முடைய இட ஓதிக்கீட்டின் நிலையான,எச்சூழ்நிலையிலும் பிறலாத பலமான நிலைபாட்டின் வாக்குறுதி என்ன? பன்முகமதத்தவர்களால் வாழப்படும் பெரிய நம் நாட்டில் சிறுபான்மை இஸ்லாமியர்களின் வாழ்வாதார உரிமையும்,நம் இறையாண்மையும் எந்த அளவிற்கு போற்றி பாதுகாக்கப்படும் என்ற தெளிவான நிலை சொல்லப்படவில்லை!
சரி இவ்வளவு வாக்குறுதியும் தந்தால் வாக்கு அளிப்பீர்களா என்றால்,அதுவும் சிந்திக்க கூடிய ஒன்றுதான்.ஏனனில்
ஒரு பெரிய பலம் பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்ட கட்சி அல்ல.அக்கட்சின் நோக்கத்தை உண்மை உணர்வோடு ஒத்துக்கொண்டாலும் காலத்தின் கட்டாயத்தாலும் ,நம் முன்னே நம்மை அழிக்கத்துடிக்கும் கொடியவர்களிடமிருந்து நாம் பிழைத்தெழ, “வெந் தீ” வளையத்திலிருந்து வெளிவரவேண்டிய இச்சூழ்நிலையில் இருக்கும் நாம் இந்த கட்சிக்கு வாக்களிக்க முடியாதவர்களாக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை!முதலில்வட்டம்,மாவட்டம்,மாநிலம் என்று வெற்றிபெற்று வரட்டும்.அவர்களின் நேர்மையான ஆட்சித்திறனைப்பார்த்து முடிவெடுப்போம்!
ஒரு பெரிய கட்சியின் தலைவன் அனைத்து மேடையிலும் முழங்கும் வார்த்தையானது மத்தியில் மதவாத கட்சியை ஆட்சி அமைக்க விடமாட்டோம் என்று லட்சோபலட்ச மக்கள் முன் கொடுக்கும் வாக்குறுதியாகும்!
என்னுள்ளத்தை திறந்து நம்மின மக்களின் நன்மைக்காக அனைத்து உணர்வுகளையும் கொட்டிவிட்டேன்!சிறந்ததை சீர்தூக்கி பார்த்து செயலாக்குவீர்களாக
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்! .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross