செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் மாசுக்கு எதிராக ஆம் ஆத்மி போராடும்! மற்ற கட்சிகள் சொல்ல முடியுமா? ஆம் ஆத்மி கேள்வி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[27 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34002
திமுகவோ, அதிமுகவோ, இதர கட்சிகளோ பகிரங்கமாக பொதுமக்களிடம் கூறி வாக்கு கேட்க ஆயத்தமா என்று கேள்வியெழுப்பிய அவர், தேவைப்படும்போதெல்லாம் அத்தொழிற்சாலையின் விருந்தினர் மாளிகையில் தங்கி சொகுசு கண்டு வரும் இக்கட்சிகளின் தலைவர்களும், அதன் அங்கத்தினரும் ஒருபோதும் இது குறித்து வாய் திறக்க மாட்டார்கள் (CP) 100 சதவீதம் உண்மை இதுவே..
மேலும் தேர்தலுக்கு நிதி + நகருக்கு வந்து போகும் போது ஓய்வெடுக்க கெஸ்ட் ஹவுஸ் + சகல வசதிகளுடன் உணவு மேலும் அவசியப்படும் போதல்லாம் தேவை ஏற்ப நிதி இப்படி சகலதையும் மற்ற கட்சிகள் அனுபவிக்கப்படும் போது எப்படி ஐயா மற்ற கட்சிகள் இந்த தொழிற்சாலைக்கு எதிராக வாய் திறந்து பொதுமக்கள் முன்னிலையில் சொல்ல முடியும்...!
காயல்பட்டினம் D C W தொழிற்சாலையின் இரசாயன கழிவு - மாசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி போராடும் என்று வெளிபடையாக கூறுகிறார்கள் மற்ற கட்சிகள் இந்த இரசாயன நச்சு ஆலைக்கு எதிராக போராட தயாரா என ஆம் ஆத்மி கேள்வி எழுப்புகிறார்களே.. நாம் ஒரு மாற்றத்தை விரும்ப வேண்டாமா..!
இரசாயன கழிவுக்கு எதிராக யார் நமக்கு குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே நமது ஓட்டுக்கள் என்று நாம் பேசினது..! கருத்து பகிர்ந்தது நமது செயலில் நிரூபிப்போமாக.. இந்த மக்களவை தேர்தலில் நகரில் அனைவரும் திராவிட கட்சிகளை புறக்களிப்போமாக...
நாம் மாறாத ஒரு மாற்றமும் வர போவதில்லை...! திராவிட கட்சிகளை இனியும் நம்பி நம்பி ஏமாறாமல் நமது வாக்கை நல்ல முறையில் பயன் படுத்துவோமாக.
திராவிட கட்சிகளுக்கு வாக்கு சேகரிப்பவர்களில் சிலர் அவர் அவர் சொந்த சுய தேவையை பூர்த்தி செய்து தான் மட்டும் பயன் பெற்று கொள்ளவே முனைப்புடன் களம் இறங்கி ஆதரவு கேட்டு வருகிறார்கள்... நகரில் பொது மக்கள் பலர் மிக தெளிவாக இருப்பதை இந்த ஆம் ஆத்மி பரப்புரையின் போது அறிய முடிந்தது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross