திட்டமிட்டு செய்ததுதான் posted byM.S.SAYYID MOHAMMED (BANGKOK)[16 April 2014] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 34393
தம்பி அப்துர் ரசாக்கின் ஒரு கருத்தில் முரண்படுகிறேன்.
“அவர்களின் அறிவிப்பில், திமுகவை தவிர வி.சி கட்சி மற்றும் கிருஷ்ணசாமி கட்சியின் பெயரை குறிப்பிட்டவர்கள், திமுக சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்று செய்த செயலாக இருக்காது என்றே நினைக்கிறேன்”. (C&p)
எவ்வளவு அறிவாளிகள் கூடி 3 நாட்கள் யோசித்து எழுதப்பட்ட தீர்மானம் தெரியுமா?
முஸ்லிம் லீக் சார்பிலும், த.மு.மு.க. சார்பிலும் சமுதாயத் தலைவர்கள் எத்தனை பேர் போய் தங்கள் கௌரவம் பாராமல் த.த.ஜ.விடம் பேசினார்கள். முஸ்லிம் லீகிற்கு ஆதரவு நிலை எடுப்பதை வெளிப்படையாக அறிவித்தால் ம.ம.க. விற்கு ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்ற கேள்வி வரும். இனி அதற்கு அதில் சொல்லணும். முஸ்லிம் லீக் பொது எதிரி தான். அதைக் கண்டுக்கொள்ளாமல் போய்விடுவோம். லீகிற்கு போடுகிறவன் போடட்டும், விரும்பாதவனை நாம் தொல்லை செய்யவேண்டாம் என்ற கருத்தில் ஜாக்கிரதையாக கையாளப்பட்ட யுக்தி தான் இது.
திருமாவளவனும், கிருஷ்ண சாமியும் அனுப்பிய தூதுக்கள் அ.தி.மு.க. விற்கான ஆதரவு விளக்கிக் கொண்டதற்கு பின் இருக்கலாம். ஆனால் முஸ்லிம் லீகின் சார்பாக ஆரம்ப முதலே கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பிறகு எப்படி மறக்கும். லீக் தனிச் சின்னத்தில் நிற்பது தெரியாதா? அப்துர் ரகுமான் இடஒதுக்கீடு கேட்டு பேசாமல் இருக்கிறாரா?
அப்துர் ரஹ்மானைவிட ஹாரூன் எந்த விதத்தில் மார்கத்தில், சமூக, சமுதாய விசயங்களில் மேலானவர்.
ஹாரூன் என்றாவது பாராளுமன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு பேசியுள்ளாரா? ஹாரூனை ஆதரிப்பதை நியாப்படுத்த கன்னியாகுமரி வேட்பாளருக்கு ஆதரவு. இவர்கள் என்ன முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வாங்கித் தருவதாக வாக்களித்தார்களா?
அண்ணனை மன்மோகன் சிங்கிடம் அழைத்துச் சென்றதுதான்
ஹாரூன் செய்த மகத்தான பணி என்று நினைக்கிறேன்.
எனவே முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணித்த செயல் என்று நம்போமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross