Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[16 April 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34394
அஸ்ஸலாமு அலைக்கும்,
முன்பு கூறியது போல அவங்க சகாக்கள் கூட அவரின் முந்திய முடிவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
மேலும் இந்த அரசியல் சூழ்நிலையை பொருத்தவரை தமிழகத்தில் தி . மு . க . கூட்டணீதான் நமக்கு சாதகமான கூட்டணி என்பதை பாமரனும் அறிவான்.
அதை தவிர்த்து அம்மாவுக்கு அல்லது மற்ற எந்த கட்சிகளுக்கும் போடும் நம் ஓட்டுகள் கண்டிப்பாக வீண்தான் என்பதை அனைவரும் நன்கு அறிவோம் .
நல்ல வேலை தேர்தளுக்கு 8 நாட்களுக்கு முன்பு தங்களுடைய அமைப்பின் நிலைபாடுகளை கூறி சமுதாய ஓட்டு மிகச் சிறிய அளவு சிதர இருந்ததை கூட நிறுதியமைக்கு நன்றி கூறதான் வேண்டும் .
அதையும் தாண்டி மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்பது சிறுபிள்ளை தனமான ஒன்று என்றாலும் சமுதாயத்துடன் அவர்கள் ஒன்று நிற்பதை நாம் இந்த சூழலில் நினைத்து பார்க்க வேண்டிய ஒன்று .
குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை மற்ற முஸ்லிம் அமைப்புகள் , கட்சிகள் போன்றவற்றை
காட்டிளும் இந்த அமைப்பின் அமைப்புரிதியான செயல்பாடுகளும் , மக்கள் தொடர்பும் மிக வலுவானது என்பதை நாம் கண்டிப்பாக ஒத்துக் கொள்ளதான் வேண்டும் . இது கண்டிப்பாக பொது எதிரியை வீழ்த்த உதவும் .
தமிழக அரசியல் நிலைமை அம்மா வுக்கு பாதகமாக மாறியதை போல் இந்திய அளவில் இன்ஷா அல்லாஹ் மோடி அலை என்பது நுரையாக மாறிவிடும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross