உரல் உலக்கையில் மாசி,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[16 April 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 34416
ஏண்டா தம்பி சாலிஹ் உங்க வீட்டில் இவ்வளவு பெரிய
அம்மியிலா மாசி இடிப்பாங்க? எங்க வீட்டில் இதை போன்ற அம்மிகளில் பெரும்பாலும் தேங்காய்,மற்றும் துவையல் அரைப்பார்கள், மாசிக்கு பெரிய உரல் உளைக்கைதான்.
உள்ளி வெங்காயத்தை போட்டு நசுக்கியவுடன் மாசி மனம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.
என்னுடைய மாணவர் பருவம் சாலை மீன் கருவாடிலதாங்க போச்சி, காலையில் புன்னக்காயல் சித்திங்க ஐந்து, ஆறு பேரு கருவாடு கூடையுடன் தினமும் நம் ஊருக்கு புன்னக்காயல் டவுன் பஸ்ஸில் வருவாங்க, வந்து ஊரின் பல பக்கமாக பிரிந்து கருவாட்டை காலி பன்னீட்டு மாலை பஸ்ஸில் ஊர்ருக்கு திரும்புவாங்க, இப்ப ஆசைக்கு கூட முடியலங்க, மக்க குட்டிகளுக்கு அதன் வாடையே தெரியாதுங்க, இப்ப சுட்டு நம்ம பசங்களுக்கு கொடுத்தா என்ன நடக்கும் நினைத்து பாருங்க.
அன்று ஒரு மாத வீட்டு செலவை இவர்கள் ஒரு சவர்மாவில், சிக்கன் பக்கோடாவில் முடிக்கிறாங்க,
எத்தனை அழகான, சிக்கனமான அந்த காலம்?
மாம்பலம் சீசன் வந்துவிட்டால் மாம்பலம் கருவாடு என்ன ஒரு மேட்சிங்?
ஆட்டுக்கறி பக்கம் எங்க போக முடியும்? வெள்ளிகிழமைகளில்
ஓடி ஒளிந்து மாட்டு கரி கடையில் ஓரமாக நின்று கரி வாங்குவோம், ஹைஜனிக் பார்க்காத அந்த காலத்தில் எந்த
நோயும் இல்லைங்க. இன்னைக்கு விதையே விசமாயிட்டேங்க?
எப்படியோ சாலிஹ் மறந்து கிடந்த என்னை போன்றவருக்கு சாளை மீன் கருவாட்டை உசிப்பிட்டீங்க, எப்படியாவது வாங்கி சுட்டு விட வேண்டியதுதான், வீட்டுல என்ன ரிசல்ட் விளப்போதோ.
அற்புதமான இந்த கட்டுரை நெய்சோறுக்கு மாசியும், பழஞ் சோத்துக்கு கருவாடும் சாப்பிட்ட பீலிங் இருந்திச்சி தம்பி. இன்னும் நிறைய எழுதுங்க, வாழ்த்துக்கள்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross