Re:...நேருக்கு நேர் எதார்த்தம்,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[27 April 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34640
எழுத்தாளர் சாந்தியின் கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் எதார்த்தமாக இருந்தது.குறிப்பாக மேலப்பாளையம் முஸ்லீம் பெண்களை பற்றி ஆராய்ச்சி செய்த பொது கிடைத்த செய்திகளை பகிர்ந்த விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.முஸ்லீம்
பெண்களிடம் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும்,சமுதாயத்தில் அணைத்து துறைகளிலும் அவர்கள் முன்னேறி செல்லும் பயணம் பற்றியும் அறிய முடிந்தது.
துளிர் அரங்கில் நடைபெறும் நிகழ்சிகளில் ஏற்படுத்தப்படும் இருக்கை அமைப்பு சற்று நெருடலை ஏற்படுத்திகிறது எனலாம். இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த ஒருவர் முஸ்லீம் பெண்கள் இப்பொழுது எல்லா விசயங்களுக்கும் வெளிப்படையாக முன்னேறி வருகிறார்கள். ரோட்டில் போராட்டம் செய்த தங்கள் மாணவர்களுக்கு ஆதரவு அளித்ததையும் சுட்டிக்காட்டினார். இதை போன்ற இருக்கை அமைப்புகள் மாற்று மத சகோதரர்களுக்கு மாற்று சிந்தனையை ஏற்படுத்த கூடும் என எண்ணுகிறேன் . ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளும் நிகழ்சிகளில் முன்னும் பின்னுமாக இருக்கைகள் அமைப்பதே சரியத் முறையாகும் என எண்ணுகிறேன். ஆனால் இங்கு நேருக்கு நேர் சமமாக மிக குறைந்த இடைவெளியில் அமைக்கபடுகிறது .எனவே வரும் காலங்களில் இந்த இருக்கை அமைப்பை மாற்றி அமைத்து துளிரின் கண்ணியத்தை மேம்படுத்தவேண்டும் என வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross