நாம் அனைவரும் உத்தமர்தானா? சொல்லுங்கள். posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (சிங்கப்பூர் )[29 April 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 34654
ஆதம் சுல்தான் காக்கா, பல விஷயங்கள் பொது தளத்தில் எழுத, விளக்க முடியாது. அப்படி எழுதினால், 'நம் பல்லை குத்தி, நாமே நாற்றத்தை முகர்ந்த மாதிரி. அது நம் அனைவருக்கும் நல்லதல்ல. விரிவாக எழுத தேவை இருக்காது, அனைவரும் புரியக்கொடிய ஆற்றல் உள்ளவர்கள் தான்.
"கடந்த கால தேர்தல் என்பது கோடீஸ்வரர்கள் மட்டும் பங்கெடுக்கும் ஒரு துறையாக மட்டுமே இருந்து வந்தது...!
அதில் நம்மை போன்ற பாமர மக்களுக்கு இந்த கோடீஸ்வரர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே வேலையாக இருந்து வந்தது..!" (C &P )
என்னது? இந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் எல்லோரும் சாதாரண நபர்கள் தானா? பாவம்! அவர்களிடம் தேர்தலில் செலவழிக்கக் கூட காசு இல்லை.
வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், பம்பாயில் போட்டியிடும், முன்னாள் 'ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து' -யின் CEO ஆக இருந்த பெண்மணி, பெங்களூர் தொகுதியில் நின்ற 'Infosys' co-founder போன்ற பலரும் சாதாரண ஆட்கள் தான்.
இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 70 லட்சம் செலவழிக்க அனுமதித்துள்ளது. ஆனால் எந்த கட்சியின் வேட்பாளரும் அதற்கு மேல் தான் செலவழிக்கின்றனர். அதில் ஆம் ஆத்மியின் வேட்பாளர்களும் அடங்கும். 70 லட்சம் செலவழிப்பவர் சாதாரண மக்களா?
சொல்கிறவர் மட்டும் உத்தமராக இருந்தால் போதாது. அவருக்கு ஆதரவாக செயல்படுபவரும் யோக்கியமானவராக இருத்தல் வேண்டும். இப்போது நம் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்காக உழைத்த ஒவ்வொரு சகோதரர்களும், இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்கிறேன் என்று மனசாட்சியுடன் சொல்ல முடியுமா?
அரசியேலே சாக்கடை தான். ஒன்றை வேண்டுமானால் ஒத்துக் கொள்ளல்லாம். மற்ற கட்சிகளை விட ஆம் ஆத்மி கட்சியினர் ஓரளவு நியாயமாக நடப்பார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross