சொர்க்கத்துக்கு குழந்தைகள் posted byNIZAR (KAYALPATNAM)[29 April 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34664
பதினைந்தாம் வயதை அடைந்திருக்கும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு என் இதயமார்ந்த வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.இந்த பள்ளியின் ஆண்டுவிழாவில் நிகழ்சிகளில்
பங்கேற்ற சிறப்பு குழந்தைகளின் திறமை,அழகு பார்வை
யாளர்களை கண்களில் நீர்முட்ட வைத்தது.பார்வை யாளர்களுக்கு அதிசயத்தையும் ஆனந்த கண்ணீரை வர வைத்தது என்றால்,அந்த குழந்தையை பெற்ற தாயிற்கு எப்படி சந்தோசம் இருந்து இருக்கும் என்று சொல்ல எனக்கு வார்த்தை இல்லை.
சிறிய இடத்தில், குறைந்த பணியாளர்களை கொண்டு துவங்கிய இந்த துளிர் பள்ளி இறைவன் அருளால்,தனவந்தர்களில் தயவால் இன்று தமிழகத்தில் சிறந்த பள்ளியாக உருவாகி இருப்பது பெருமைக்குரியதாகும். இயற்கையான சூழலில் அழகிய கட்டிகங்களுடன்,திட்டமிட்டு செயலாற்றும் இந்த பள்ளி அனைவர்களின் இதயம் கவர்ந்தவை எனலாம்.
இறைவா எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று மனம் புழுங்கி,வெந்துபோன மனவளர்ச்சி குன்றிய குழந்தையை பெற்ற தாயிற்கு துளிரின் உதயம் பெரிய ஆறுதலும்,வரப்பிரசதாமாக அமைந்தது எனலாம்.இப்படிப்பட்ட குழந்தைகளை உறவினர்களே பாரமாக நினைக்கும் இந்த காலத்தில்,அதன் ஒவ்வொரு அசைவையும் அவதானிக்கும் தாயின் நீர்முட்டும் கண்கள்.
வெளியில் ஒரு கவலையும் இல்லாதது போல் காட்டி கொண்டாலும்,அந்த குழந்தைக்கு இன்னல் ஏற்படும் பொழுது,இதயம் சுக்கு நூறாகி தனிமையில் மால மாலயாய் கண்ணீர்.
இதற்கெல்லாம் விடியலாக மற்ற குழந்தைகளை போல் கம்பீரமாக இந்த குழந்தைகளும் பள்ளி வேனுக்காக காத்திருக்கும் நிலைமையை ஏற்படுத்தியது துளிர் பள்ளியின் தூய சேவை எனலாம் துளிருக்கு பல செல்வந்தர்கள் தயவு இருந்தாலும்,
இன்னும் துளிரின் வாசனை படாத எத்தனயோ செல்வம் கொழிக்கும் செல்வந்தர்கள் இல்லாமல் இல்லை.சொர்க்கத்துக்கு குழந்தைகளான இந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை கரம் ஏற்று இருக்கும் இந்த துளிருக்கு என்ன தேவை,என்ன செய்ய வேண்டும் என தானாக முன்வந்து செய்வது சொர்க்கத்தில் முன்கூட்டியே இடம் போடுவதாகும்.
அற்புதமான கட்டமைப்புடன், திட்டமிட்டு தொடர் சேவை செய்து வரும் அதன் நிர்வாகி சகோதரர் வக்கீல் அஹ்மது அவர்களுக்கும்,துளிர் சேக்னா ஹாஜி அவர்களுக்கும், ஆசிரியர்கள்,பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இனையதள எழுத்தாளர்கள், சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross