வாழ்க்கைக்குள் மூழ்கிடாத வாழ்க்கை வாழ்ந்து காட்டுபவர்! posted byகத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha)[30 April 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34668
நவீன சிந்துபாத்தின் இயற்கையோடு சில பரிசோதனைகள்
சகோ. சாளை பஷீர் அவர்களின் எழுத்தோவியத்தில் மலர்ந்த – “தீவில் பிறந்த பெரு நிலம்” இயற்கை அறிவியலாளர் அலீ மனிக்ஃபான் அவர்கள் பற்றிய இக்கட்டுரை நேற்றைய “தி இந்து” நாளிதழிலும் வெளிவந்து இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்!
இப்படியும் ஒரு மனிதரா? இயற்கையோடு இயைந்த வாழ்வில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மானிக்ஃபான் அவர்கள், கற்காத மேதையாகவும் திகழ்ந்து வருகிறார்! கப்பல் கட்டும் கலை, தற்சார்பு வாழ்வியல், கட்டிடக்கலை, மொழியியல், கல்வி, பொறியியல் தொழில் நுட்பம், கடல் உயிரியல், கடல்சார் ஆய்வு, புவிபரப்பியல், வானியல், வேளாண்மை, சூழலியல் போன்றவற்றிலும் தனது தடங்களை பதித்தவர். 40 ஆண்டுகள் வானவியல் ஆய்வு செய்தவர்..சந்திர நாள்காட்டியை மிக துல்லியமாக வடிவமைத்தவர்
இந்த அபாரமான அபூர்வமான திறமைகளை வைத்துக் கொண்டு அவர் ஒருபோதும் செல்வத்தை குவிக்க முயற்சித்ததே இல்லை. கல்வியும் திறமைகளும் வயிற்றைக்கழுவ மட்டுமே என்ற மூட நம்பிக்கையும் அவருக்கில்லை. இறைவன் வழங்கிய இந்த திறமைகளை வைத்து மனித வாழ்வை இன்னும் எப்படி எளிமையாக கையாள்வது என சிந்தித்தவர். அதற்காக தனது சொந்த வாழ்க்கையையே சோதனைக்களமாக மாற்றி சோதித்து அறிந்தவர். பிறழ்வு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் உயர்ந்த மனிதர்! பெருங்கடலின் நடுவே மிதக்கும் வெண்ணெய் படலம் போன்றவர். வாழ்க்கைக்குள் மூழ்கிடாத வாழ்க்கை வாழ்ந்து காட்டுபவர்!
Salute to him!
கட்டுரையாளர் சாளை பஷீர் காக்காவின் தெளிவான எழுத்து நடை, வாசிப்புக்கு மேலும் மெருகூட்டுகின்றது. மென்மேலும் தொடருங்கள்!
சுற்றுச்சூழல் ஆர்வலர் பஷீர் காக்கா அவர்களுடன், இத்தகைய இயற்கைத் தேடலில் எமது விடுமுறைக் காலங்களைக் கழிக்க ஆவல்! இன்ஷா அல்லாஹ், நடக்குமா என்று பார்ப்போம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross