குப்பை கூளங்கள் posted byNIZAR (KAYALPATNAM)[01 May 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34682
காயல்பட்டினம் கடற்கரை சென்னை மெரினா போல் கடல் அலையின் ஓரத்தில் இருந்து மக்கள் அமர்வதற்கு,ஏன் கால்பந்தாட்டமே நடைபெறும் அளவிற்கு அகலமான நீண்ட மணல் பரப்பு கொண்டதாகும்.கடலின் ஓரத்தில் மீனவர் படகுகளும் ஒரு சில ஓலை குடியிருப்பும்,ஒரே ஒரு பஞ்சாயத்து ரேடியோ ரூமும்,கூடவே வட்டமான இருக்கை அமைப்பும் இருந்தது.இது தாங்க மொத்த கடற்கரையின் அமைப்பாக இருந்தது.எங்கள் மாணவர் பருவங்கள் கடலில் விளையாடுவதும்,மணலில் புரள்வதும்,மீண்டும் தூரத்தில் நங்கூரம் போட்டு இருக்கும் படகை போட்டி போட்டு தொடுவது என மீனவர்களோடு சவகாசம் பண்ணு வதாகவே இருந்தது.ஏனனில் எங்கள் வீட்டில் மாடியில் இருந்து பார்த்தால் கடல் அலை தெரியும் அளவிற்கு சுனாமி எச்சரிக்கை வரம்பில் உள்ளோம்.காலப்போக்கில் தமிழக அரசால் 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கபட்டு கடற்கரையின் புதிய உருவம் ஏற்பட்டது.
வெளியூர் மக்களின் வருகை நாளுக்கு நாள் பெருகியது.குறிப்பாக ஞாயிற்றுகிழமை சென்னை மெரினாவிட்கு போகுவதுபோல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.அனால் நகராட்சி இது வரை
எந்த சுகாதார பணியும் செய்வதில்லை.
சாதாரன காலங்களில் வாரம் ஒருமுறையாவது பணியாளர்களை அனுப்பி துப்பரவு செய்யலாம்.இப்பொழுது பள்ளிகூட லீவு என்பதால் தினமும் மக்கள் கூட்டம் வருகிறது.எனவே ஒவ்வொரு நாளும் துப்பரவு பணியாளர்களை அனுப்பி சுத்தம் செய்யலாம்.நடைவியாபாரிகள் மக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கி கொடுப்பது தீர்வாக அமையும்.புதிய நகர்மன்றம் ஏற்பட்டு மூன்று வருடம் ஆகியும் எந்த வித பலனும் மக்களை சென்றடைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross