என் குடும்பத் தூண்களுள் ஒன்று! posted byS.K.Salih (Kayalpatnam)[05 May 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34760
என் குடும்ப அங்கத்தினருள் மிக முக்கியமானவர். எனது பால்ய பருவத்தில் என்னைத் தூக்கி வளர்த்த தாய்க்குலங்களுள் ஒருவர். கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் மிகைத்திருந்த கால கட்டங்களிலும், குடும்ப உறவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனதைக் கட்டுப்படுத்தி அதற்கு ஒத்துழைத்தவர். கடைசிக்காலங்களில், கசப்புகள் முற்றிலும் மறக்கப்பட்ட நிலையில் எங்கள் குடும்பங்கள் மீண்டும் பின்னிப் பிணைந்த காட்சிகளுடன் என் கண்களை ஈரமாக்கிய தருணங்கள் அடிக்கடி வந்து சென்றன.
குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினையென்றால், முன்னின்று பேசித் தீர்க்கும் வல்லமையைக் கொண்டிருந்தவர்.
என் தாயார், பெரிய தாயார், இந்த மர்ஹூமா தாஹா சாச்சி அவர்கள் - ஆகிய மூவரும் ஒட்டிப் பிறந்த மும்மூர்த்திகள் என்று அனைவராலும் புகழப்படும் அளவுக்கு தோழமை கொண்டிருந்தவர்கள். அத்தோழமையில் வேடிக்கை, அன்பு, பாசம், பரிவு என அனைத்தும் ஒருங்கிணைந்திருக்கும். அப்பேர்பட்ட என் குடும்பத் தூண்களுள் ஒன்று இன்று சாய்ந்துள்ளது.
மர்ஹூமா அவர்கள் தங்கள் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் தன் பெருங்கிருபையால் பொறுத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கிடவும்,
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், நஹ்வீ அஹ்மத் முஹ்யித்தீன் மாமா, நஹ்வீ ஆலிம் காக்கா, ஈஸா காக்கா, நண்பன் ஷெய்க் அலீ ராஜிக், அன்புத் தம்பி முஹ்யித்தீன் லெப்பை, தங்கை ஹபீப் ரஊஃபா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையைத் தந்தருளவும் நான் மனதார துஆ செய்கிறேன்.
அனைவருக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
துயரத்தில் பங்கேற்றவர்களாக...
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.)
அவர்களின் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross