KEPA எந்த குறிப்பிட்ட உள்நோக்கம் இல்லாமல் , ஊர் நலனே பெரிதென கருதி , ஊரின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல் படும் பொது நலம் நாடும் அமைப்பினர். அவர்கள் நமதூர் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை … ஒரு கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள் என்றால் அதில் நிச்சயமாக நமக்கு கெடுதலான ஒரு மருத்துவ முகாமே நடக்க இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.அப்படி ஒரு மருத்துவ முகாமை நம்மைபோன்றவர்களின் உதவியுடன் நடத்தி , நமதூரில் நச்சு நோய் ஒன்றும் இல்லை என்பதை போலித்தனமாக அரசு க்கு அறியத்தரவே நடக்கும் ஒரு சூழ்ச்சியாக கூட இருக்கலாமே.
பொதுநல அமைப்பு ஏதாவது மருத்துவ முகாம் நடாத்த விரும்பினால் , அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழக்கம் போல நம் K.V.A.T. புஹாரி ஹாஜி அறக்கட்டளை நமதூர் மக்களுக்காக செய்வதற்கு தயாராக இருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் அனைவர்க்கும் அடக்கத்தோடு அறியத்தருகிறது .
காயல்.காம் நிறுவனம், இதற்கு ஒரு பாலமாக திகழ வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கே வைக்க விரும்புகிறது .
மக்கள் நலனில் என்றும் ,
கே.வீ.ஏ.டி.ஹபீப் முஹம்மத் (கத்தார் )
கே.வீ.ஏ .டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளை.
குறுக்குத்தெரு
காயல்பட்டணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross