Re:...ARABIAN NIGHTS..... posted bymackie noohuthambi (chennai)[19 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35516
ஆயிரத்து ஒரு இரவுகள் என்று ஒரு கதை. அதை ARABIAN NIGHTS என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அந்த கதை சொல்லும் அழகி அந்த கதையை முடிக்காமல் அடுத்த நாள் இரவு...அடுத்த இரவு... என்று தொடர்ந்து கொண்டிருந்ததால் ஏக்கமும் எதிர்பார்ப்பும் அந்த அராபிய மன்னனுக்கு இருக்கும்.
ஷா ஜஹான் துரை அவர்கள் இரண்டாம் பாகத்தையும் எழுதுவார்கள்.. கதையை கேட்டு பார்த்து முடித்தபிறகு நமது அபிப்பிராயத்தை இங்கு பதிவு செய்வோம் என்று காத்திருந்தேன். ஆனால் அரபு மன்னரின் அந்தரங்க கதை என்பதால் அதை தொடர இந்த "அரசருக்கு" ஷா ஜஹானுக்கு தெரியவில்லையோ - மனம் இல்லையோ அல்லது அதற்கு மேல் சொல்ல ஆதாரங்கள் இல்லையோ அப்படியே பாதியில் நின்று விட்டது. அதற்கிடையில் விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன...
நானும் இந்த செய்தியை ஒரு நாளிதழில் படித்தேன். ஆனாலும் மன்னர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள் - அவர்கள் இந்தியர்கள் ஆனாலும் அரபியர்கள் ஆனாலும் ஆங்கிலேயர்கள் ஆனாலும் எல்லோருமே மனிதர்கள் என்ற வகையில் சபலங்களுக்கு உள்பட்டவர்களே. மனிதன் படைக்கப்பட்டபோதே அந்த WEAKNESS உடன்தான் மனிதன் படைக்கப் பட்டிருக்கிறான். அந்தப்புரத்து செய்திகளை அம்பலத்துக்கு கொண்டுவந்தால் ஷாஜஹான் துரை என்ற அரசரும் சாமானியன் என்ற நூஹுத்தம்பியும் குற்றவாளி கூண்டிலே நிறுத்தப்பட வேண்டியவர்களாகவே இருப்பார்கள். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக.
எனக்குள்ள ஆதங்கமெல்லாம் "ஷா ஜஹான் துரை இந்த கட்டுரை எழுதியதன் மூலம் இந்த சமுதாயத்துக்கு சொல்ல வந்த செய்தி என்ன" என்பதுதான்.
மகாத்மா காந்தி அவர்களுக்கு MISS MAYO என்ற ஆங்கிலேய பெண் ஒரு கடிதம் எழுதியிருந்தாள். பல பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் காந்தியின் அந்தரங்கங்கள் அசட்டுத்தனங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எழுதி அவரை தூசித்து எழுதி இருந்தாள். காந்தி எல்லாவற்றையும் படித்துபார்த்து விட்டு அவளுக்கு ஒரே வரியில் பதில் எழுதினார்."உங்கள் கடிதம் கிடைத்தது. அதில் எனக்கு பிரயோஜனமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவைகளை திருப்பி அனுப்பியுள்ளேன். அந்த பிரயோசனமான பொருள் என்ன தெரியுமா? MISS MAYO அந்த கடிதங்களை இணைத்து ஒரு "safety pin " குத்தி இருந்தார்கள்.அதை மட்டும் காந்தி எடுத்துக் கொண்டார். இப்போது நீங்கள் எழுதியுள்ள கட்டுரையில் எது பிரயோசனமானது என்று வாசகர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். இந்த இணையதள ஆசிரியரும் வீணாக சர்ச்சையில் இழுக்கப்பட்டுள்ளார். நான் இதை ஒரு நாவல் என்று நினைத்து ரசித்து படித்து முடித்திருக்கிறேன். எல்லோரும் அப்படி ஒரு ரசனையுடன் படித்து நிறுத்திக் கொண்டால் நல்லது. விமர்சனங்கள் கட்டுரை ஆசிரியரை பணபடுத்துமா அல்லது புண்படுத்துமா. அது அவரவர் மன நிலையை பொருத்தது.
ஒரு பெரிய மலை பிரசவித்தது..ஆனால் வெளியே வந்தது ஒரு சுண்டெலி...பெரிய ஏமாற்றம் தரும் கட்டுரை.ஷா ஜஹான் துரைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross