கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக...!!! posted byarabishuaib (Jeddah)[25 June 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35586
ஜெசிந்தா... கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக...!
என ஜெசிந்தாவில் ஆரம்பித்த கட்டுரை ஆசிரியரின் இடரல்
ரிசானா..., ஆயிஷா..., ஜனன்... என தொடர்கிறது. அவர் கேட்டதை, பார்த்ததை, படித்ததை உண்மையோடு உரசி அசலை தராமல் தரிசை தருகிறார்.
அவரினுள் இருக்கும் எழுத்தாற்றல் தரமற்ற, பயனில்லாத ஆக்கங்களைத் தரும் திசையிலிருந்து திருப்பப்பட வேண்டும், இஸ்லாமிய விழுமியத்திற்குள் புகுத்தப்படவேண்டும்.
மறைந்த மன்னரின் மறைவான செய்திகள் கழிக்கப்பட வேண்டுமேயன்றி கிளப்பப்படக்கூடாது. மரணித்த ஒருவரின்
அறங்கள் அலசப்பட வேண்டுமேயன்றி, அவரின் குறைகள் குரைக்கப்படக்கூடாது.
###...மக்கட்கு பயண்தரக்கூடிய, நற்பண்பூட்டக்கூடிய ஆக்கங்களை கொடு. அது கட்டுரையாகட்டும் / காவியமாகட்டும். படித்தோம், பயனுற்றோம் எனும் நினைப்பை வாசகன் மனதில் விதை...### - இது கட்டுரை ஆசிரியருக்கு -
###...செய்திகள், ஆக்கங்களை தருவது மட்டும் ஒரு ஊடகத்தின் பொறுப்பல்ல. அதன் மீதும் பாயும் சந்தேகங்கள், தவறுகளை களைவதும் உன் பொறுப்பே...,
...கிடைக்கப்பெறும் ஆக்கம் / கருத்தை ஒருமுறைக்கு பலமுறை படித்து தவறிருப்பின் திருத்திக்கொள். தரமிருப்பின் தளமேற்று. தரமிழப்பின் வாசகனுக்கு தெரிவித்துவிடு...### - இது ஊடக ஆசிரியருக்கு -
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross