படித்த பட்டதாரிகளை பற்றி கம்யூனிஸ்ட் இக்கட்சிக்கு கவலை இல்லையா..? தோழர்களே அநீதிக்கு துணை போகாதீர்கள்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[16 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35946
நகரில் கம்யூனிஸ்ட் இக்கட்சிக்கு ஓட்டுக்கள் மிக மிக மிக குறைவாக இருந்தாலும் நகர மக்கள் மத்தியில் நல்ல மரியாதை மதிப்பு இருந்து வருவது உண்மை.. ஆனால் அந்த மதிப்பையும் மரியாதையையும் கேள்விக் குறியாக்குவதாக இந்த தகவல் நமக்கு உணர்த்துகிறது..
அக்டோபர் 30, 2012 அன்று நகராட்சி நடப்புகள் குறித்த கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் - அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர், ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்து கீழ்க்கண்டவாறு பேசினார்:
மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஊதியம் வாங்குவோர் கூட ஊர் சுற்ற நேரமின்றி இருக்கையில், வெறும் 2000 ரூபாய் அளவில் ஊதியம் பெறும் நகராட்சியின் ஊழியர் தினமும் மோட்டார் பைக்கில் கவலையின்றி ஊர் சுற்றுவதைப் பார்க்கும்போது மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.
தங்கள் கட்சி விமர்சனம் செய்த அதே ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தற்போது பணி நீட்டிப்பு வழங்கப்படாதபோது, நகர கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்கள் - ஆணையரை சந்தித்து, அவர்களை நீக்க வேண்டாம் என முறையிட்டுள்ளனர்! (CP)
நகர கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்களே...!
படித்து டிப்ளமோ பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக அரசு வேலைக்காக காத்திருந்து வேலைக்கிடைக்காமல் மன வேதனையில் - சிரமத்தில் இருக்கும் படித்த பட்டதாரிகளுக்கு நகராட்சியில் முன்னுரிமை கிடைக்க குரல் கொடுங்கள்..
நகர கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களே...! நியாயத்திற்கும் - நீதிக்கும் நீங்கள் குரல் கொடுத்தால் மட்டுமே நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உங்களை மதிப்பார்கள்.. இதை உங்கள் நினைவில் கொள்ளுங்கள்..!
நகர கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களே..! நகரின் நம் வாலிபர்கள் படித்து வேலைக்காக அலையும் சிரமத்தை உணருங்கள்.. அவர்கள் குடும்பத்தின் வறுமையை சிந்தித்து பாருங்கள்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross