செய்தி: ரமழான் 1435: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி! மையவாடிக்கு நிலம் வாங்க ரூ. 1 லட்சம் தருவதாக நகர முஸ்லிம் லீக் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதயம் தொட்ட இப்தார் நிகழ்ச்சி posted byNIZAR (kayalpatnam)[26 July 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 36117
காயல்பட்டினத்தில் கிழக்கு பகுதியில் கடலை தொடும்
தூரத்தின் அளவில் அமைந்து இருப்பதுதான் இந்த இறைஇல்லம்.
இந்த கடற்கரை முஹையதீன் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை உதவி வழங்கும் நிகழ்வுடன் இஃப்தார் இடம்பெற்றது.
பழமையான இந்த இறைஇல்லம் ஒரு காலத்தில் தொழுகைக்கு ஆல் இல்லாமல் இருந்தது. விளையாட்டு பருவத்தில் நாங்கள் அந்த பகுதிக்கு செல்லும்பொழுது இந்த பள்ளிக்கு செல்வதுண்டு
வெகுகாலமாக இங்கு இரண்டு முஸ்லீம் பெரியவர்கள் தொடர்ந்து தொழுதும் பராமரித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மீனவர்கள் மத்திய புறம்போக்கு இடமான இந்த பள்ளிவாசல் பகுதியில் குடியேறினார்கள்.
தங்கள் வழிபாட்டு தளங்களையும் அமைத்தார்கள்.
காலபோக்கில் தூத்துக்குடி திரேஸ்புரம் ஊரிலிருந்து கடல் தொழில் செய்யும் முஸ்லீம் மீனவர்கள் இங்கு வர
ஆரம்பித்தனர்.இன்று கிட்டத்தட்ட 50 முஸ்லீம் மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்கள் இந்த பள்ளியின் ஜமாதினராகவும் சந்தாதாரராகவும் உள்ளனர்
இந்த இஸ்லாமிய மீனவர்களின் வருகையை தொடர்ந்து இந்த பள்ளியை பராமரித்து வந்த MTS காதர் அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் அவர்கள் சகோதரர்களுடன் இணைந்து முழு முயற்சி எடுத்து உள்ளூர் மற்றும் வெளிநாடு உதவியுடன் பள்ளியை சீரமைத்தார்கள். இந்த பள்ளியில் நிரந்தரமாக ஒரு இமாம் போடப்பட்டு இஸ்லாமிய மீனவ மக்களின் குடும்பங்களுக்கு குரான் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை வகுப்புகளும் நடைபெறுகின்றன.
சொந்த மைய வாடி இல்லாததால் தூரத்தில் உள்ள பள்ளிக்கு மையத்தை எடுத்து செல்கிறார்கள். இந்த சிரமத்தை போக்க பள்ளி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு உள்ளார்கள். அதற்காக பள்ளி அருகில் உள்ள 20 சென்ட் நிலத்தை வாங்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான விலை சுமார் 15 லட்சம் நிதியையும் உள்ளூர் வெளியூர், வெளிநாடு வருவாய் மூலமே நாடி உள்ளார்கள்.
எனவே இஸ்லாமிய சகோதரர்கள் இந்த பள்ளிக்கு உதவுங்கள்.
உங்கள் பங்களிப்பு ஏழை மீனவ குடும்பங்களில் இஸ்லாமிய வாழ்க்கை முறையை நிலை நிறுத்த செய்யும். இந்த புனித ரமலானில் இதை போன்ற இறை இல்லங்களுக்கு நிதி உதவிகளை வழங்கி இறைவனின் அருளை பெறுவோமாக
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross