Dear Doctor Sir! posted bykavimagan m.s.abdul kader (dubai)[29 March 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3633
மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
த.த.ஜ.வின் தேர்தல் நிலைப்பாடு, நாம் கண்ணை மூடிக்கொண்டு தயங்காமல் பின்பற்றக்கூடிய அளவிற்கு சிறந்தது என்ற தங்களது கருத்து தவறானது என்று எண்ணுகிறேன்.
இந்திய முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வில்லையெனில், அவர்களால் சமூக நீதி என்னும் சமதளத்திற்கு எட்டவே முடியாது என்று நமக்காக எடுத்துரைத்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களது பரிந்துரையின் பக்கங்களை
திறந்து கூட பார்க்காமல் குப்பையில் வீசி எறிந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் தி.மு.க.கூட்டணி. கடந்த
ஆண்டு, சென்னை தீவுத்திடலில், த.த.ஜ..இதற்காகவே ஒரு மாநாடு நடத்தி, மேற்கண்ட கமிஷனின் பரிந்துரை
நிறைவேற்றப்பட வில்லையெனில், ஒருபோதும் காங்கிரசை ஆதரிக்கமாட்டோம் என்று தீர்மானம் போட்டதோடு
நில்லாமல், பிரதமர் அவர்களையும் சந்தித்து வலியுறுத்தியது. இப்போதும் தேர்தல் அறிக்கையில், த.த.ஜ.குறிப்பிட்டு
இருப்பதைப்போல், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்ற எந்த வாசகமும் தி.மு.க.வின்
தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. மாறாக, பரிசீலிப்போம் என்ற கருணாநிதியின் கண்துடைப்பு வாசகமே
அதில் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், இதுவரை கருணாநிதியால் நாற்பது ஆண்டு காலத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்,அவர் நிறைவேற்றியது அவரது குடும்பத்திற்கு பலன்தரும் ஐந்து சதவிகிதத்தை மட்டுமே!
மேலும், 160 தொகுதியில் போட்டியிடும் அ.தி,மு.க. இரண்டே இரண்டு முஸ்லிம்களுக்கே வாய்ப்பளித்திருப்பதாகவும்,
அதேநேரத்தில் 120 தொகுதிகளில் மாத்திரமே போட்டியிடும் தி.மு.க. நான்கு முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்திருப்பதாகவும் கூறி அதுவும் தி.மு.க.வை ஆதரிக்க ஒரு காரணம் என்று த.த.ஜ. சொல்வது, 31 இடங்களில் போட்டியிட்டும் ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பு வழங்காத பா.ம.க.வை ஆதரிக்க சரியான காரணம் ஆகுமா?
செய்ததன் அடிப்படையில் ஆதரிப்பது என்பதுதான் சரியான நிலைப்பாடு. வெறும், வாக்குறுதிகளை மாத்திரம் நம்பி ஆதரிப்பதானால், தனது பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்திலேயே
முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ள ஜெயாவை ஏன் ஆதரிக்கக்கூடாது? இன்னும் சொல்லப்போனால், லயோலா கல்லூரி கருத்து ஆய்வு, அவுட்லுக் மற்றும் தி வீக் போன்ற ஆங்கிலப்பத்திரிகைகளால் 70 சதவிகித
வாக்குகளைப் பெற்று அடுத்து முதல்வராக வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளவராக சுட்டிக்காட்டப்படும் ஜெயாவை ஏன் ஒருமுறை ஆதரிக்கக்கூடாது? ஒவ்வொரு முறையும் தி.மு.க.விற்கே வாக்களித்து விட்டு ஜெயா முஸ்லிம்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவது எப்படி நியாயமாகும்?
ஒருவேளை,ம.ம.க, மு.லீக். போன்ற சமுதாய இயக்கங்கள்
மற்றும் பல்வேறு கட்சியின் சார்பில் போட்டியிடும் முஸ்லிம்கள் மற்றுமுள்ள தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆதரவு
என்ற நிலைப்பாட்டை த.த.ஜ. எடுத்திருக்குமேயானால் நியாயமானதாக இருந்திருக்கும். இப்போதைய நிலைப்பாடு என்பது
கண்மூடி பின்பற்றத்தகுந்தது அல்ல. கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழுவது போல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross