நாமார்க்கும் பகையல்லோம்! posted byJaved Nazeem (Chennai)[26 August 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 36752
பக்குவமான கட்டுரை. வார்டு தேர்தலில் நீ வென்றிருந்தால் உனது சேவை அனேகமாக ஒரு வார்டோடு நின்றிருக்கலாம். இப்போது முழு சமுதாயத்திற்க்கும் உனது பஙளிப்பைத் தடையின்றி வழங்கமுடிகிறது. எல்லாம் நன்மைக்கே. جزاكم الله خيرا
கருத்து கூறும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என பெரியவர்கள் சொல்வார்கள். நமது கருத்தை எங்கு வெளிப்படுத்தினாலும் பின் விளைவுகளை உணர்ந்து செயல் பட வேண்டும்.
நம்முடைய நாட்டின் சூழ்நிலைகள் மாறி இருக்கின்றது. ஆங்கிலேயனிடம் கருணை வேண்டி நின்ற (Read more at: http://goo.gl/qHI1n5, http://goo.gl/NqdbrN) கொள்கைவாதிகளின் வழி வந்தவர்கள் முன்னேற்றத்தின் பெயர் சொல்லி அதிகாரத்திற்க்கு வந்திருக்கின்றார்கள். யார் அதிகாரத்திற்க்கு வந்தாலும் இந்தியா நமது நாடு என்கிற உணர்வு வேண்டும். அச்சமோ, தயக்கமோ தேவையில்லை. ஏனெனில் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு அளவிட முடியாதது. தங்களுடைய உயிரையும் பொருட்களையும் மட்டும் அல்ல தங்கள் முன்னேற்றத்தையே தியாகம் செய்ய முன் வந்தார்கள்.
தன்னுடைய வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைப்பதில்லை என்று சகோதரர் சாளை பஷீர் சொல்வதுண்டு. சுதந்திரப் போருக்கு வித்திட்ட கேரள மாப்பிள்ளாக்கள், நேதாஜியுடன் தோளோடு தோள் நின்று போராடிய ஷா நவாஸ் கான், ஹபீபுர் ரஹ்மான், கப்பலோட்டிய தமிழனுக்கு கப்பல் வாங்க பொருள் உதவி செய்த ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் போன்றோரின் தியாகங்கள் மற்றும் நம் முன்னோர் செய்த எண்ணற்ற தியாகங்கள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். நம்மைத் தூண்டி விட்டு கலகம் செய்து கட்சி வளர்க்க விரும்பும் ஃபாசிஸ சக்திகளுக்கு நம்மை அறியாமலும் துணை போய் விடக் கூடாது. நம் முன்னோர்களின் தியாகங்கள் வீணாகிட அனுமதிக்கக் கூடாது.
அமிட்ஷா தென்னகத்தில் கட்சி வளர்க்க விரும்புவதால், இது போன்ற சூழ்நிலைகள் தொடர வாய்ப்புள்ளது. உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், இவற்றை பக்குவத்தோடும் அறிவோடும் எப்படி அணுகுவது என்கிற கல்வி நம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். KEPA போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது பற்றி ஒரு சகோதரர் கருத்து கூறி இருந்தார். நிச்சயமாக அப்படி ஒரு அமைப்பு தேவை. இரண்டு சமுதாயத்திலும் உள்ள நல்ல தலைவர்களைக் கொண்டு ஒரு நல்லுறவு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.
பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்தால் அது அ.தி.மு.க.வின் வாக்குகளை பெருவாரியாக எடுத்துக் கொள்ளும். எனவே அ.தி.மு.க. வினர் இரட்டிப்பு கவனத்தோடு இது போன்ற கலகம் விளைவிக்கும் செயல்களை அணுக வேண்டும்.
நடைபெற்ற சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மா.துரை, கோட்டாட்சியர் - வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது. உங்களைப் போன்ற நியாயவான்கள் இருப்பதால் தான் தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது.
இறுதியாக ஒரே ஒரு கருத்தை கூறி இந்த நீண்ட பதிவை நிறைவு செய்கிறேன். “இந்த உலகம் இறை நம்பிக்கையாளர்களுக்கு சிறைச்சாலைப் போன்றது” என்று இறைத் தூதர் சொன்னார்கள். திருமறையில் இறைவன் கூறுகிறான் "உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)" (2:214)
பொது வாழ்விலோ, தனி வாழ்விலோ சோதனைகள் ஏற்படும் போது தளர்ந்து விடவோ, வரம்பு மீறவோ வேண்டாம். இந்த உலகின் வெற்றி தோல்விகள் நிரந்தரமானது அல்ல. எந்த ஒரு செயலிலும் இறைவனின் பொருத்தத்தை மட்டுமே எண்ணி செயல் படுவோம். அப்படிப் பட்ட நன்மக்களாக நாம் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross