விபரம் அறிய விளைகிறேன்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[26 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36751
தம்பி இபுராஹிமுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்!
திடீர் கோவில் முளைத்த அன்றே இதுபோன்ற ஒட்டுமொத்த ஒற்றுமையான எதிர்ப்பை நாம் காட்டியிருந்தால் அன்றே தீர்வு கண்டிருக்கலாம்!ஆனால்,
அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் பொடுபோக்காக விட்டு விட்டும் அதற்காக சிறு பணத்தொகையை செலவழித்து தீர்வு காண முன்வரும் தருணத்தில் அந்த மிக சிறு தொகையைக் கூட தர மனமில்லாமல் மறுத்தாலும் இப் பிரச்னை முற்றிவிட்டது. அப்படி முற்றிய காலம் வருடங்களாக வளர்ந்து அது அந்த இடத்தில இருக்கக்கூடிய உரிமையைப் பெறக்கூடிய அளவிற்கு காலங்கள் வருடங்களாக உருண்டோடி விட்டது!
இந்த நேரத்தில் நமக்கிருக்கின்ற ஒரே வலுவான ஆயுதமான ஆதாரம் நெஞ்சாலை ஆக்கிரமிப்பில் அது அமைந்திருக்கிறது
என்ற நிலையைத்தான் வலியுறுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதால், அதே ஆக்கிரமிப்பு விவகாரத்தை அவர்களும் கையிலெடுக்கிறார்கள் என்ற அவர்களின் கேள்வியத்தான் நான் குறிப்பிட்டேன்,அவர்கள் கேட்டதை அப்படியே எழுதிய நான், என் நடுநிலை நெஞ்சத்தினுடைய ஒரு நெருடலின் வெளிப்பாட்டையும் சற்று வெளிப்படுத்தி இருக்கிறேன். அவ்வளவுதான். என் நெருடலுக்கு தாங்களிடம் தக்க விபரம் இருக்குமாயின் அதை என் e -mail லில் தெரிவித்தால் திருப்தி அடைவேன்!
இதற்குமேல் இதுபற்றி இதில் நாம் கருத்துபரிமாரத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். மேலும் தாங்கள் விளக்கம் கூற முன்வந்தமைக்கு நன்றி கூறி ஏனைய விபரம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross