மத ஊர்வலம் posted byNIZAR (kayalpatnam)[01 September 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36931
கணபதி பாப்பா மோரியா,கணபதி பாப்பா மோரியா,என்னடா இந்த பாட்டை படிக்கிறானே என்று பார்க்கிறீங்களா?இதை படித்து கொண்டுதான் பம்பாயில் கணபதி என்ற விநாயாகர் சிலையை கடலில் கரைப்பார்கள்.இது போன்ற வழிபாடு இந்தியாவில் வேறு
எந்த மாநிலத்திலும் கிடையாது.
பம்பாயில் கூட தாராவியில் மிகப்பெரிய தலைவராக திகழ்ந்த தமிழகத்தை சேர்ந்த வரதராஜ பெருமாள் என்பவரால்தான் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் வாழ்க்கை சரித்திரம்தான் நாயகன் என்ற திரைப்பட கருவாகும்.
காலப்போக்கில் சென்னையில் மீலாது மாதத்தில் மண்ணடியில் இருந்து சென்னை மெரினா வரை மீலாது நபி ஊர்வலம் நடந்தது. சிறிய கூட்டமாக ஆரம்பிக்கபட்ட அந்த மீலாது ஊர்வலம் நாளடைவில் மிகப்பெரிய கட்டுகடங்காத கூட்டத்தை எட்டியது.இந்த மீலாது ஊர்வலம் கடந்து செல்வதற்கு அன்னாசாலையே மணிகணக்கில் முடங்கிப்போனது.
இதற்கு மாற்றாக இந்துமுன்னனி தலைவர் இராமகோபாலன் அவர்களால் உருவாக்கபட்டதுதான் இந்த விநாயாக சதுர்த்தி ஊர்வலம்.
முந்தய காலங்களில் இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் மண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிறிய சிலைகளை கிணத்தில் போடுவதும் கொழுக்கட்டை சுட்டு அனைவருக்கும் கொடுப்பதும் தமிழ் வீடுகளில் வழக்கம். இதை போன்ற எந்த ஊர்வலமும் எந்த பதட்டமும் பரபரப்பும் இல்லை. அனால் இன்றும் கூட வாகனங்களும் சிலையும் கூடிஉள்ளது.
அனால் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
விநாயகர் சிலை எடுக்கபடும் ஒவ்வொரு ஊரில் இருந்தும் அணைத்து மக்களும் கலந்து கொண்டால் பல லட்சம் பேர்
வந்து இருக்கவேண்டும். எனவே இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்தான் இதில் பெரும்பாலும் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரையில் இந்து சமுதாய பெருமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள். முஸ்லீம்
களோடு வியாபாரம் என்று ஏதாவது ஒருவகையில் இணக்க
மாக உள்ளார்கள். அதனால் முஸ்லீம்களின் அணைத்து விசயங்களையும் அவதானித்து வருகிறார்கள்.
எனவே இதை போன்ற எந்த ஊர்வலமும்,வேறு எந்த நடவடிக்கை மூலமும் தமிழகத்தில் சகோதரர்களாக வாழ்வதை முறியடிக்க முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளது.
பொதுவாக இந்து சகோதரர்களிடம் ஒரு துளி கூட மத வெறி இருப்பதில்லை. அதற்கு உதாரணம் அவர்கள் குழந்தைகளை பள்ளிவாசல் கொண்டு வந்து ஒதிபார்த்து செல்கிறார்கள். உண்மையில் மனதில் சிறு வெறியோ,கபடமோ இல்லாதவர்கள்.
ஒவ்வொரு முஸ்லீமுக்கும் நிச்சயம் ஒரு பள்ளிகூட அல்லது கல்லூரி இந்து சகோதரர் இல்லாமல் இருக்கமுடியாது. இடையில் எங்கு சந்தித்தாலும் மதங்களை கடந்து கட்டிபிடித்து கண்ணீரை முட்டவைத்து விடுகிறார்கள்.
இந்த தமிழகம் அனைவரும் சுபிட்சமாக வாழும் சுந்தர மாநிலமாக தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross